தங்கக்கடத்தல்.. டிமிக்கி கொடுத்து வந்த கேரள அதிகாரி 'ஸ்வப்னா சுரேஷ்'.. பெங்களூரில் அதிரடி கைது!.. நடந்தது என்ன?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த ஸ்வப்னா சுரேஷ் பெங்களூரில் வைத்து தேசிய புலனாய்வு அமைப்பால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக துபாயிலிருந்து, கேரளாவில் உள்ள ஐக்கிய அரசு அமீரக துணை தூதரக முகவரிக்கு ஜூன் 3-ம் தேதி சரக்கு விமானம் மூலம் வந்த  பார்சலில் இருந்த தூதரக முகவரியை வைத்து தங்கம் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்ததால், சோதனையிட அனுமதி பெற்று காத்துக்கொண்டிருந்தனர்.

அப்போது அப்பார்சலில் உருளை வடிவில் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 30 கிலோ தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனிடையே போலி அடையாள அட்டையுடன், அந்த பார்சலை பெற வந்த ஸரித் என்பவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணையில், அந்த நபர், தூதரகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வந்தவர் என்பதும், முறைகேட்டில் ஈடுபட்டதால் பணி நீக்கம் செய்யப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.

அவரை மேற்கொண்டு விசாரித்ததில், கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத்துறையின் செயலாளராக இருந்த ஸ்வப்னா சுரேஷிற்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவர, தேசிய அளவில் இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதுடன், அவரை வேலைக்கு அமர்த்தியது தொடர்பாக கேரள முதல்வர் பினராய் விஜயனின் முதன்மை செயலர் சிவசங்கரின் பதவியில் வேறொருவர் அதிரடியாக பணியமர்த்தப்பட்டார்.

இதனிடையே, குற்றம்சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், தலைமறைவானதால்,  தேடப்பட்டுவந்தார். இந்நிலையில், இவ்வழக்கில் முக்கிய நபரான முன்னாள் பெண் அதிகாரி ஸ்வப்னா சுரேஷ், பெங்களூருவில் வைத்து தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்