பெற்ற மகளுக்கு ஒரு தாய் செய்யுற காரியமா இது? அநியாயமாக ஏமாந்து போன இளைஞர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரளா: பிரபல வியாபாரியிடம் சொந்த மகளை அனாதை என்று கூறி  மோசடி செய்த தம்பதியினரை போலீசார் கைது செய்தனர்.

Advertising
>
Advertising

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் அரிக்கோடு பகுதியை சேர்ந்த வியாபாரி அப்துல் ஹாஜி (26).  இவர் கடந்த 6 மாதங்களுக்கு  முன்பு சமூகவலைதள பக்கத்தில் "திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். ஆனால், பெண் அனாதையாக இருக்க வேண்டும்" என்று தனது விருப்பத்தை பதிவு செய்துள்ளார். இந்நிலையில், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பைஜூ நசீர் - ராசிதா தம்பதியினர் தங்களது 2வது மகள் போட்டோவை எடுத்துகொண்டு மலப்புறத்தில் உள்ள வியாபாரியை சந்தித்தனர்.

இளைஞருக்கு கல்யாண ஆசை

அப்போது அவரிடம், பெண்ணின் போட்டோவை காண்பித்து, "இந்த பெண் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு அனாதை இல்லத்தில் வசித்து வருகிறார். இவரை உங்களுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்து தருகிறோம்"  என்று கூறியுள்ளனர்.  அவர்களது பேச்சை நம்பிய வியாபாரி பெண்ணின் போட்டோவை பார்த்ததும் ரொம்ப பிடித்து போனது. பின்பு இந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள தயாராக இருக்கிறேன் என்று தனது விருப்பத்தையும் அவர்களிடம் தெரிவித்துள்ளார். அந்த சந்திப்பின்போது, தம்பதியினர் வியாபாரியிடம் முன்பணமாக ஒரு லட்சம்  வாங்கிச் சென்றனர். பின்னர் இரண்டு வாரம் கழித்து மீண்டும் வியாபாரி சந்தித்து பணம் கேட்டுள்ளனர்.

பணம் பறித்த தம்பதி

அப்போதும்  வியாபாரி 2 லட்சம் கொடுத்துள்ளார். இதேபோன்று ஒரு மாதம் கழித்து மீண்டும் வியாபாரியை சந்தித்த தம்பதியினர், இன்று பெண் பார்க்கச் செல்ல வேண்டும் எனக் கூறி 3 லட்சம்பெற்றுள்ளனர். தவணை முறையில் பணத்தை மட்டுமே பெற்று சென்றுள்ளனர். ஆனால், இதுவரை அந்த வியாபாரியிடம் பெண்ணை காட்டவில்லை. இந்த நிலையில், மீண்டும் ஒருமுறை அவசர தேவையாக 2 லட்சம் ரூபாய் பணத்தை வியாபாரியிடம் வாங்கி சென்றுள்ளனர்.

ஏமாற்றம் அடைந்த வியாபாரி

மேலும், பல தவணைகளில் 11 லட்சம் வரை பணம் வாங்கி கொண்டு பெண்ணை மட்டும் காட்டால் இருந்து வந்தனர். இதனால் சந்தேகமடைந்த அப்துல் ஹாஜி, இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் சம்பந்தப்பட்ட பைஜூ நசீர் - ராசிதா தம்பதியினரை அழைத்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. 

போலீசார் விசாரணையில், " போட்டோவில் உள்ள பெண் இவர்களுடைய இரண்டாவது மகள் என்பதும், பணத்துக்கா சொந்த மகளையே அனாதை என்று கூறி வியாபாரியிடம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்பு போலீசார் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

KERALA, MARRIED COUPLE, MONEY THEFT, POLICE INVESTIGATION, THIRUVANANTHAPURAM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்