'கேரள' அரசின் 'கழுத்தை' நெரிக்கும் கடத்தல் விவகாரம்...' - பிரதமருக்கு 'அவசர அவசரமாக' கடிதம் எழுதிய 'முதல்வர்'... வேகம் பிடிக்கும் 'விசாரணை'!
முகப்பு > செய்திகள் > இந்தியாசில தினங்களுக்கு முன் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திருவனந்தபுரத்தின் மணப்பாடு பகுதியில் அமைந்துள்ள அந்நாட்டு தூதரக முகவரிக்கு வந்த பெட்டி கடத்தல் தங்கமுள்ள பெட்டி என்ற சந்தேகத்தின் பெயரில் சுங்கத்துறை அதிகாரிகள் அதனை ஆய்வு செய்தனர்.
அப்போது அதில், 30 கிலோ தங்கம் இருந்த நிலையில், அதனை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக, தூதரக அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணிபுரிந்து அங்கிருந்து கடந்த ஆண்டு நீக்கப்பட்ட சரித் நாயர் என்பவருக்கு தொடர்பு இருந்த நிலையில், அவரை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கடத்தலுக்கு பின் கேரள அரசின் தகவல் தொடர்பு பிரிவில் பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் என்பவர் உள்ள தகவல் வெளியான நிலையில் அவர் தற்போது தலைமறைவாக உள்ளார். இந்த தங்க கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் அலுவலகத்திற்கு தொடர்பு இருக்கும் நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலர் சிவசங்கரன் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, கேரள அரசிற்கும் இந்த கடத்தல் சம்பவத்துடன் சம்மந்தம் இருப்பதாக தகவல் பரவி வரும் நிலையில், முதல்வர் உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 'இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக அனைத்து தகவலும் வெளிக்கொண்டு வர வேண்டும். நாங்களும் விசாரணைக்கு தயார்' என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், கேரளாவில் நடைபெற்ற தங்க கடத்தல் வழக்கு தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியதன் பெயரில், தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது அனுமதியளித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'சேட்டா பஸ்சை நிறுத்துங்க'... 'மூச்சிரைக்க ஓடி வந்த பெண்'... 'பஸ்சை நிறுத்தியதும் நடந்த சம்பவம்'... நெகிழ வைக்கும் வைரல் வீடியோ!
- ‘கிலோ கணக்கில் தங்கம்... லட்சம் லட்சமா, பணம்!’ - ‘கடத்தல் ராணி’ ஸ்வப்னாவின் பின்னணியில் இருப்பது ‘இவரா?’ - அதிர்ச்சியில் கேரள அரசியல்!
- VIDEO: ‘குவாரண்டைனில் இருந்து தப்பித்த’.. ‘போதை ஆசாமி’ .. நடுரோட்டில் நடந்த பங்கம்! வீடியோ!
- 'வளைகுடாவிலிருந்து வந்த 30 கிலோ 'கடத்தல் தங்கம்'... மாட்டிக்கொண்ட 'அரசு' ஊழியர், ஓட்டம் பிடித்த பெண் 'அதிகாரி' - கேரள அரசியலில் 'பரபரப்பு'!
- VIDEO: விடிய விடிய ’ஆபாச நடன’ பார்ட்டி... அரசியல்வாதி, தொழிலதிபர்கள் கும்மாளம்...!’ - உள்ளே சென்ற போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
- 'தனிமையில் உறவு'... 'கருத்தடை மாத்திரைக்கு பதிலா சைனைடு'... '20 பெண்களை சீரழித்த சீரியல் கில்லர் 'சைனைடு மோகன்'!
- டாக்டர் இதுக்கு ஒரு 'ஆபரேஷன்' பண்ணனும்... நாய்க்குட்டி போல தோளில் 'தூக்கிக்கொண்டு' வந்த நபர்... மிரண்டு போன மக்கள்!
- 'கேரள அரசை பாராட்டிய ஐ.நா சபை...' 'கொரோனாவை கட்டுப்படுத்தியதற்காக...' இந்தியாவில் இருந்து கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா மட்டும் பங்கேற்பு...!
- சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்ட ‘சிசிடிவி கேமரா’.. கிணற்றில் மிதந்த ‘பாதிரியார்’.. அதிர்ச்சியில் மக்கள்..!
- VIDEO: 60,000 தேனீக்களை முகத்தில் படரவிட்டு... அசால்டாக வீடியோவுக்கு போஸ் கொடுத்த இளைஞர்!.. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி!