'வெளிநாட்டுல இருக்கறவங்க என்ன பண்ணுவாங்க!?'...'அதுக்காக தான் 'இத' செய்றோம்!'... கேரள முதல்வர் பினராயி விஜயன் அடுத்த அதிரடி!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா அச்சுறுத்துலைத் தொடர்ந்து, கேரளத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக வாழும் வெளிநாடுகளில் ஆன்லைன் மூலம் மருத்துவ உதவி மையங்கள் திறக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் வசிக்கும் கேரள மக்கள் கொரோனாவால் இறப்பதைத் தடுக்க கேரள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஹெல்ப் டெஸ்க் மற்றும் ஆன்லைன் மருத்துவ ஆலோசனை வழங்கவும் கேரள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், ``கேரளத்தில் இன்று ஒன்பது பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை 345 பேருக்கு தொற்று ஏற்பட்டது, அதில் 259 பேர் இப்போது சிகிச்சையில் உள்ளனர். மாநிலம் முழுவதும் 1,40,474 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அதில் 749 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர்.

டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்ற 212 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில் 15 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. காசர்கோடு மெடிக்கல் காலேஜ் 300 படுக்கை வசதியுடன் கூடிய 24 மணி நேர கொரோனா மருத்துவமனையாக செயல்படுத்தப்படுகிறது. மங்களூர் மருத்துவமனைக்குச் சென்ற நோயாளிகளுக்கு நேர்ந்த சில பிரச்னைகள் நம் கவனத்துக்கு வந்துள்ளன. அதுகுறித்து கர்நாடக அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும்.

அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் வசிக்கும் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் கொரோனாவால் மரணமடையும் தகவல்கள் வந்துள்ளன. எனவே, கேரள மக்கள் அதிகமாக வாழும் வெளிநாடுகளில் ஆன்லைன் மூலம் ஐந்து மருத்துவ உதவி மையங்கள் திறக்கப்படுகின்றன. இங்குள்ள டாக்டர்கள் வெளிநாட்டில் உள்ள மலையாளிகளுக்கு மருத்துவ ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு காணொளி காட்சி மூலம் ஆலோசனை வழங்கப்படும். இந்திய நேரப்படி தினமும் மதியம் 2 மணி முதல் 6 மணி வரை மருத்துவர்கள் ஆலோசனை வழங்குவார்கள்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்