'தந்தையின் பல வருஷ விருப்பம்'.. திருமண நாளன்று நிறைவேற்றிய மணமகள்.. நெகிழவைக்கும் நிகழ்வு!
முகப்பு > செய்திகள் > இந்தியாதிருமணத்தன்று, மணமகள் ஒருவர் தனது திருமணத்துக்கு வந்தவர்களை ஆட்டோவில் வைத்து ஊர்வலமாக சென்றுள்ள நிகழ்வு வைரலாகியுள்ளது.
கேரள மாநிலம் குறிச்சித்தனத்திற்குட்பட்ட ஸ்ரீகிருஷ்ணஸ்வாமி கோயிலில் மகிமா என்கிற பெண்ணுக்கும் சுராஜ் என்கிறவருக்கும் நிகழ்ந்த திருமணத்திற்கு பிறகு, அதே திருமண அலங்காரத்துடன் ஒரு மணப்பெண் ஆட்டோ ஓட்டிய சம்பவம் அம்மாநிலத்தில் ட்ரெண்டாகியது.
கேரளாவின் உழவூர் பகுதியைச் சேர்ந்த மோகனன் நாயர் என்பவர் கடந்த 1995-ஆம் வருடத்தில் இருந்து, அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். தொடக்க காலத்தில் இருந்து, மகளின் திருமணத்துக்கு வரும் அனைவரையும் ஆட்டோவில் அழைத்துச் செல்லும் ஆசையில் இருந்துள்ளார்.
இந்நிலையில் மோகனன் நாயரின் மகள் மகிமா திருமண அலங்காரத்தில் ஆட்டோ ஓட்ட, அதன் பின்னே சுமார் 20 ஆட்டோக்கள் ஊர்வலமாக வலம் வந்திருக்கின்றன. சிறு வயதில் இருந்தே தந்தையைப் பார்த்து ஆட்டோ ஓட்டும் ஆசையில் இருந்த மகள், மகிமா முறையாக பயின்று, ஆட்டோவுக்கான லைசன்ஸூம் எடுத்தவர்.
திருமணத்துக்காக செலவு செய்து கார்களில் ஊர்வலம் செல்லும் இந்த காலக்கட்டத்தில், தனது திருமணத்தில் தானே ஆட்டோ ஓட்டிய இந்த மணமகள் பலராலும் பாராட்டப் பெற்றுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- நள்ளிரவில் ஆபத்தில் இருந்த தமிழ்ப்பெண்.. சைரனை அலறவிட்டு காப்பாற்றிய கேரள ஆம்புலன்ஸ் டிரைவர்!
- ‘விமான வீல்களில் சிக்கிய ஊழியருக்கு நேர்ந்த கதி’.. சோகத்தில் மூழ்கிய கேரள குடும்பம்!
- 'தேசிய அளவில் முதலிடம் பிடித்த கேரள மாணவி.. 2-ஆம் இடத்தில் சென்னை மாணவர்’.. சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்!
- தற்கொலைக்கு முயன்ற கேரள தம்பதியினர்.. காப்பாற்றிய காவல்துறைக்கு பாராட்டு!
- ’தூங்காம அழுதுட்டே இருந்தா.. அதான்’.. 15 மாத பெண் குழந்தையைக் கொன்ற தாய்!
- 'பெண்ணை கொல்ல 'மனித வெடிகுண்டாக' மாறிய நபர்'...அதிரவைக்கும் சம்பவம்!
- தேர்தல் ஜனநாயக கடமை.. மலேசியாவிலிருந்து தனி விமானம்.. பறந்து வந்து வாக்களித்த பில்லியனர்!
- ‘1000 ரூபா குடுத்துதானே போறோம்.. ஏன் லேட் பண்றீங்க’.. இளைஞர்களை அடித்து வெளுத்த சொகுசுப்பேருந்து ஊழியர்கள்!
- ‘ஏது பாம்பா?’.. ஒப்புகைச் சீட்டு எந்திரத்துக்குள் இருந்த பாம்பு.. அலறி ஓடிய வாக்காளர்கள்!
- மின்சாரம் தாக்கி யானை பலி.. மின்வேலிகளால் தொடரும் ஆபத்து!