மாப்பிள்ளை செயலால்.. கல்யாணம் முடிஞ்ச கையோட ஃபயர் ஸ்டேஷன் போன ஜோடி.. வைரலாகும் பின்னணி!!
முகப்பு > செய்திகள் > இந்தியா கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கடப்பாகடா என்னும் பகுதியில் வைத்து சமீபத்தில் ஒரு திருமணம் நடந்துள்ளது. விஷ்ணு மற்றும் ஹர்ஷா ஆகிய மணமக்களுக்கு ஒரு மண்டபத்தில் வைத்து திருமணம் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.
Images are subject to © copyright to their respective owners
இந்த நிலையில், திருமணம் சடங்கு ஒன்றிற்காக மணப்பெண்ணின் கை விரலில் மோதிரம் ஒன்றையும் மாப்பிள்ளை விஷ்ணு அணிந்துள்ளார். அந்த சமயத்தில் அளவெடுத்த விரலில் அந்த மோதிரத்தை அணிவதற்கு பதிலாக, வேறு ஒரு விரலில் விஷ்ணு மோதிரத்தை அணிவித்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றது.
இதனைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் ஹர்ஷா விரலில் அணியப்பட்ட மோதிரம் காரணமாக அவரது விரல் வீங்க தொடங்கி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக வலியிலும் ஹர்ஷா துடித்துள்ள நிலையில் மோதிரத்தை கழட்டுவதற்காக பலமுறை முயன்றும் அந்த முயற்சிகள் அனைத்தும் வீணாய் போனதாக தகவல்கள் கூறுகின்றது.
Images are subject to © copyright to their respective owners
இந்த நிலையில், திருமணம் முடிந்த கையுடன் மாப்பிள்ளை மற்றும் மணப்பெண் ஆகிய இருவரும் அங்கிருந்து அருகே உள்ள ஃபயர் ஸ்டேஷன் ஒன்றிற்கும் சென்றுள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து, அங்கிருந்த அதிகாரிகள் உதவியுடன் நைலான் நூலை பயன்படுத்தி கொஞ்ச நேர போராட்டத்திற்கு பின் மோதிரத்தை கழட்டி உள்ளனர்.
Images are subject to © copyright to their respective owners
திருமண மண்டபத்தில் இருந்து நேராக ஃபயர் ஸ்டேஷன் சென்ற மணமக்கள் தொடர்பான புகைப்படங்களை அங்கே இருந்த புகைப்பட கலைஞர்கள் தங்கள் கேமராவிலும் பதிவு செய்துள்ளனர். அத்துடன் திருமணம் முடிந்த கையுடன் மணமக்கள் இருவரும் ஃபயர் ஸ்டேஷன் செல்வது தொடர்பான வீடியோ காட்சிகளும் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
இறந்ததா நெனச்சு அடக்கம் செஞ்ச நபர்.. வீடியோ காலில் தோன்றியதால் இன்ப அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்!!
தொடர்புடைய செய்திகள்
- இந்த பாட்டு வேண்டாம்.. கல்யாண வீட்டுல வந்த தகராறு.. வாலிபருக்கு நேர்ந்த சோகம்..!
- கல்யாணத்துக்கு பொண்ணு தேடியும் கிடைக்கல.. போலீஸ் ஸ்டேஷனுக்கு போன இளைஞர்.. லெட்டரை பார்த்து ஆச்சர்யமான அதிகாரிகள்..!
- மாமனார் - மருமகனான ஷாஹித் அப்ரிடி, ஷாஹீன் அப்ரிடி.. ஒன்று திரண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள்..!
- "என் மனைவி அப்படி சொன்னத நம்ப முடியல".. குஜராத் பெண் பேசியதை தொடர்ந்து தென்காசி இளைஞர் சொன்னது என்ன.?
- தாலிகட்டும் நேரத்துல மாயமான மாப்பிள்ளை.. பெண்வீட்டார் எடுத்த அதிரடி முடிவு.. கடலூரில் பரபரப்பு..!
- "ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு..".. தென்காசி பரபரப்பு சம்பவத்தில் புதிய வீடியோ வெளியிட்ட குஜராத் பெண்.!
- தீவிபத்தில் தாய், தாத்தா, பாட்டி மரணம்.. "கல்யாணம் நல்லபடியா நடக்கணும்".. திருமணம் முடிஞ்சதும் சொன்ன தந்தை .. நொறுங்கிப் போன மணப்பெண்.!!
- "லூடோ கேம்ல லவ்".. பாகிஸ்தான் பெண்ணை காதலிச்சு.. நேபாளத்தில் கல்யாணம் பண்ணி.. கர்நாடகாவில் குடியேறினாரா இந்திய இளைஞர்?
- "பொண்டாட்டிகிட்ட அடி வேணுமா அடி இருக்கு".. இணையத்தை கலக்கும் திருமண பேனர்.. "ஆர்டிஸ்ட்னு நிரூபிச்சிட்டாங்கப்பா?" 😅
- விசேஷத்தில் ஒரே டேபிளில் அமர்ந்த ஆண்கள் .. அத்தனை பேரும் கல்யாண பொண்ணோட Ex Boyfriend ஆ? வேறலெவல் சம்பவம்.!