'கொரோனா வந்தா என்ன'?... 'நெஞ்சுல நின்னுட்டிங்க டீச்சர்'... ரிஸ்க் எடுத்த ஆசிரியையின் நெகிழ்ச்சி செயல்!
முகப்பு > செய்திகள் > இந்தியாநம்மிடம் மனிதநேயம் இருந்தால் போதும் கொரோனா என்ன எத்தனை கொடிய வியாதி வந்தாலும் அதனை எல்லாம் அடித்து தும்சம் செய்யலாம் என்பதை உணர்த்தியிருக்கிறது இந்த சம்பவம்.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக இருப்பது கேரள மாநிலத்தில் தான். கொரோனாவைக் கட்டுபடுத்த அம்மாநில அரசு பல்வேரு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு நிலவி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பனால் வாழ்க்கை முறை மாறலாம். ஆனால் மனிதநேயம் மாறாது என்பதை கேரளாவின் அங்கன்வாடி ஆசிரியை ஒருவர் நிரூபித்துள்ளார்.
பள்ளிக்கூடம் மூடப்பட்டுள்ளதால், பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தசூழ்நிலையில் அங்கன்வாடி ஆசிரியர் ஒருவர் மாணவன் வீட்டிற்கே மதியம் உணவு எடுத்து சென்றுள்ளார். கொரோனா அச்சம் காரணமாக மக்கள் வெளியிடங்களில் நடமாடுவதை தவிர்த்து வரும் நிலையில், தனது மாணவனுக்காக ஆசிரியரே மதிய உணவு எடுத்து சென்ற நிகழ்வு பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மனித நேயம் என்று ஒன்று இருக்கும் வரை கொரோனா என்ன, எது வந்தாலும் நம்மால் எதிர்க்க முடியும் என நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். தற்போது இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘மிஸ் யூ அப்பா’!.. ‘அவர் முகத்தக்கூட பாக்க முடியல’.. ‘ஒருவேளை நான் மட்டும்...!’.. நெஞ்சை ரணமாக்கிய இளைஞரின் பதிவு..!
- ஒண்ணும் ஆகாது, தைரியமா இருங்க .... 'பீதி'யில் உறைந்து போன மக்களுக்கு .... தைரியம் தரும் 'சுகாதாரத்துறை'!
- 'கை தட்டல்கள்', 'ஆரவாரங்கள்' இல்லாமல் ... சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ... முதல் முறையாக நடந்த சம்பவம் !
- சீனாவில் ‘கொரோனாவை' பரப்பியது 'அமெரிக்கா' தான்... 'மருத்துவ ஆய்விதழ்' மூலம் வெளியான 'அதிர்ச்சித்' தகவல்... வெளிப்படையாக 'மன்னிப்பு' கேட்க சீனா 'வலியுறுத்தல்'...
- இந்தியாவில் தீவிரமடையும் 'கொரோனா' ... 'ரசிகர்கள்' இல்லாமல் நடைபெறவுள்ள 'இந்தியா - தென்னாபிரிக்கா' போட்டி ?
- 'கனடா பிரதமரின் மனைவிக்கு கொரோனா'?... 'அதிர்ச்சியில் மக்கள்'... வைரலாகும் ட்விட்டர் பதிவு!
- 'யோகிபாபு', 'நிரோஷா' ஆகியோருடன் ... 'தமிழக அரசு' வெளியிட்ட கொரோனா விழிப்புணர்வு வீடியோ
- 'பல்லாயிரம்' மக்கள் திரண்டிருந்த மைதானம் ... ஒருவருக்கு உறுதி செய்யப்பட்ட கொரோனா ...
- இந்தியாவில் தீவிரமடையும் 'கொரோனா' ... 'பள்ளிகள்' முதல் 'திரையரங்குகள்' வரை ... டெல்லி முதல்வரின் புதிய அறிவிப்பு
- 'கையை நல்லா கழுவுங்க' ... 'தேசமே' தேடும் 'கொரோனா' காலர் ட்யூன் குரல் ... சொந்தக்காரர் இவர் தான் !