பாயாசம் சாப்பிட்டு... பக்தி பாடலுக்கு அடிமையான முதலை!.. சன்னிதானத்தில் வந்து சுவாமியை தரிசித்த போது நடந்த அதிசயம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் பிரசித்தி பெற்ற அனந்தபத்மநாபசாமி கோவில் குளத்தில் 80 ஆண்டுகளாக உயிர்வாழ்வதாக கூறப்படும் ராட்சத முதலை ஒன்று, முதன் முதலாக கோவிலின் சன்னிதானத்துக்குள் வந்து சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. பாயாசம் சாப்பிட்டு பக்தி பாடலுக்கு அடிமையான பப்பியா முதலை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.
கேரள மாநிலம் அனந்தபுரத்தில் உள்ள ஒரு கோவிலில், முதலை ஒன்றை பல ஆண்டுகளாக வளர்த்து வருகின்றனர்.
கேரள மாநிலம் காசர்கோடு அடுத்த அனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற அனந்தபத்மநாபசாமி கோவில் அமைந்துள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசாமி கோவிலின் மூலகோயிலாகக் கருதப்படும் இந்த கோவிலை சுற்றி அமைந்துள்ள பெரியகுளத்தில் ராட்சத முதலை ஒன்று வசித்து வருகிறது.
ஆரம்ப காலத்தில் வெள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட இந்த முதலை தொடர்ந்து 80 ஆண்டுகளாக குளத்தில் வசித்து வருவதாக கூறப்படுவதால் இந்த கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் இதனை அதிசயமாக பார்த்துச் செல்கின்றனர்.
குளத்தில் இருந்து தலையை வெளியே காட்டும் போது கோவிலின் மேல் சாந்தி இந்த முதலைக்கு உணவாக சர்க்கரை பொங்கல் வழங்கி வருவதாகவும், பபியா என்று பெயரிட்டு அழைக்கப்படும் இந்த முதலை அவ்வப்போது நீருக்கு அடியில் உள்ள குகைப்பகுதியில் சென்று மறைந்து கொள்ளும் என்றும் கூறப்படுகின்றது.
இந்த நிலையில், கடந்த 20 ந்தேதி அதிகாலையில் கோவிலின் நடை திறக்கப்பட்ட நேரத்தில் குளத்திற்குள் இருந்த முதலை பபியா, முதன்முதலாக மெல்ல கோவிலுக்குள் நுழைந்து சன்னிதானத்தில் வலம் வந்ததாக கூறப்படுகின்றது. இதனை கண்ட கோவிலின் மேல் சாந்தி சுப்பிரமணிய பட் என்பவர் புருஷ சுத்தம் மற்றும் விஷ்ணு சுத்தம் ஆகிய பக்தி பாடல்களை பாடியதும் மெல்ல நகர்ந்து சென்ற முதலை மீண்டும் குளத்திற்குள் இறங்கிக் கொண்டது.
இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை கோவில் நிர்வாகத்தினர் வெளியிட்டுள்ளனர். வழக்கமாக கோவிலின் நடை சாத்தப்பட்டதும் நீருக்குள் இருந்து வெளியில் வந்து கோவிலுக்கு காவல் போல நடையில் படுத்துக் கொள்ளும் முதலை பபியா, அதிகாலையில் பூஜை முடிந்ததும் குளத்திற்குள் சென்று விடுவது வழக்கம் என்று சுட்டிக்காட்டுகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- VIDEO: 'எல்லாம் அந்த கடவுளுக்காக தான்...' 'தள்ளாத வயசுலையும் கோயிலுக்கு செல்ல...' - 2,200 கி.மீ சைக்கிளில் பயணம் செய்யும் பாட்டி...!
- 'எந்த அனுபவமும் இல்ல!'.. 'ஒரு பக்கம் மீன் விற்பனை'.. 'இன்னொரு பக்கம் ஆன்லைன் வகுப்பு!'.. குடும்ப சூழலால் மாணவிகளின் துணிச்சல் முடிவு!
- 70 வருசமா ஒருநாள் கூட 'பபியா' கோயிலுக்கு உள்ள வந்தது இல்ல...! - அனந்த பத்மநாபசுவாமியை தரிசித்து சென்ற முதலை...!
- 'விரக்தியில் லாட்டரி சீட்டை கிழித்து எறிந்த ஆட்டோ டிரைவர்'... 'ஆனா இப்படி ஒரு ட்விஸ்ட் நடக்கும்ன்னு யாரும் நினைக்கல'... பரபரப்பு சம்பவம்!
- “அப்போ.. புரிதல் இல்லை.. இயக்குநர் வற்புறுத்தினாரு”.. இணையத்தில் பரவும் தனது ஆபாச காட்சி.. இப்போது சட்டக் கல்லூரி மாணவியாக இருக்கும் நடிகை பரபரப்பு புகார்!
- VIDEO: ஆதரவு கொடுக்கவேண்டிய ‘நீங்களே’ இப்டி செஞ்சா.. இனி ‘யாருகிட்ட’ போய் சொல்றது.. மனதை உலுக்கிய ‘கண்ணீர்’ வீடியோ..!
- VIDEO: 'பூஜை செய்துகொண்டிருந்த பூசாரி'.. கூட்டத்தை விலக்கிவிட்டு கற்பகிரகத்துக்குள் சென்று கவுன்சிலரின் கணவர் செய்த ‘பரபரப்பு’ சம்பவம்! வீடியோ!
- 'வைரலான ரொமாண்ட்டிக் போட்டோ ஷூட்'... 'அர்ச்சனை செய்த நெட்டிசன்கள்'... 'இந்த கேள்வி எல்லாமா கேப்பீங்க'... தம்பதியர் சொன்ன பஞ்ச் பதில்!
- உண்டியல்ல காணிக்கை தான் போடுறான்னு நினைச்சா... கடைசில 'இது'க்காகவா?.. சென்னையின் 'பிரபல' கோயிலில் அரங்கேறிய நூதன சம்பவம்!
- 'அதோட மதிப்பு 5 கோடி இருக்கும்...' 'குடும்பத்துல, தொழில்ல பிரச்சனை வராம இருக்க இத பண்ணி தான் ஆகணும்...' - 'சாமிக்கு பயந்து எடுத்த முடிவு...!