கேரள நடிகை சாப்பிட்ட தோசையில் தங்க மூக்குத்தி! எப்படி வந்துச்சு? பதறிய குடும்பம்

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரளா: தோசை சாப்பிடலாம் என ஆசையாக இருந்த கேரள நடிகைக்கு தோசைக்குள் அதிர்ச்சி காத்திருந்தது. இந்த தகவலை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

கேரள நடிகை சாப்பிட்ட தோசையில் தங்க மூக்குத்தி! எப்படி வந்துச்சு? பதறிய குடும்பம்
Advertising
>
Advertising

மனிதனுக்கு முக்கிய தேவையாக இருப்பது உணவு. ஆனால் தற்போது அதில் பல கலப்படங்கள் செய்து ஏராளமான நோய்கள் உருவாக தொடங்கி விட்டன. சில உணவங்கங்களில் உணவை ஏனோதானோவென்று தயார் செய்கிறார்கள். உணவில் பல்லி, கரப்பான்பூச்சி உள்ளிட்ட பூச்சிகள் இருந்த செய்திகள் அடிக்கடி வருவதுண்டு. இதை புகைப்படம், வீடியோ எடுத்து போட்டு இணையதளத்தில் டிரென்ட் ஆவதும் அடிக்கடி நடக்கும். அந்த உணவகங்களில் உடனடியாக அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பர்.

Kerala actress Suriya Tara had a Nose Stud at dosa flour

தோசைமாவு வாங்கிய நடிகை:

இந்த நிலையில், கேரள மாநிலம் கொச்சி காக்கநாடு பகுதியை சேர்ந்தவர் சூரிய தாரா. தொலைக்காட்சி நடிகையான இவர் ஏராளமான மலையாள தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சூரிய தாரா நேற்று முன்தினம் இரவு படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வரும் வழியில், எரூர் பகுதியில் ஒரு கடையில் தோசை மாவு வாங்கி வந்துள்ளார்.

தோசைக்குள் இருந்த பொருள்:

வீட்டிற்கு வந்து வாங்கிவந்த தோசை மாவில் அவரின் தாயார் தோசையாக சுட்டுத்தர குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டனர். அப்போது சூரிய தாராவின் சாப்பிட்ட தோசையில் தங்க மூக்குத்தி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அதிர்ச்சி அடைந்தேன்:

இந்த சம்பவம் குறித்து சூரிய தாரா தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்  அதில், 'இந்த தோசை கடையில் இருந்து வாங்கி வந்த மாவில் சுடப்பட்டது. என்னுடைய தோசையில் மூக்குத்தி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். இந்த தோசையை குழந்தைகள் சாப்பிட்டிருந்தால் உடல் நலனுக்கு பிரச்சினை ஏற்பட்டு இருக்கும். பெரிதாக சிக்கல்கள் உருவாக வாய்ப்பு உண்டு.

தோசை மாவை பேக் செய்யும் போது எதிர்பாராத விதமாக மூக்குத்தி மாவில் விழுந்திருக்கலாம். தவறு அனைத்து இடங்களிலும் நடக்கும். உணவு விஷயத்தில் நாம் இன்னும் கூட கவனம் செலுத்தலாம்' எனக் கூறி இருந்தார். இந்த செய்தி பலரால் பகிரப்பட்டு வைரலாகியுள்ளது.

SURIYA TARA, NOSE STUD, KERALA, ACTRESS, DOSA, சூரிய தாரா, தோசை, மூக்குத்தி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்