என் மனைவிக்கு இன்னொருத்தரோட தொடர்பு இருக்கு.. நைட்ல அடிக்கடி போன் வருது.. வேணும்னா செக் பண்ணி பாருங்க.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
முகப்பு > செய்திகள் > இந்தியாதொடுபுழா: கேரளாவில் கணவர் ஒருவர் தன் மனைவி பேசிய போன் கால்களை மட்டுமே ஆதாரமாக வைத்து விவாகரத்து வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்ஜினியரிங் படிச்சிட்டு.. சுயேட்சையாக களம் இறங்கி வெற்றி பெற்ற 22 வயது இளம் வேட்பாளர்
பொதுவாக திருமணமானவர்கள் சேர்ந்து வாழ பிடிக்கவில்லை என்றாலோ அல்லது ஒருவரை ஒருவர் ஏமாற்றி வந்தாலோ குடும்ப நீதிமன்றத்திற்கு சென்று விவாகரத்து வாங்க முயற்சிக்கலாம். எந்த காரணமாக இருந்தாலும் சரி நீதிமன்றத்திற்கு தேவை ஆதாரமும் ஆவணமும்.
இந்நிலையில் கேரள மாநிலம் குருப்பம்பட்டியில் வசிக்கும் ஒருவர் தன் மனைவி தன்னை ஏமாற்றி வருவதாக கூறி விவாகரத்து கேட்டுள்ளார் கடந்த 2006-ம் ஆண்டு மே மாதம் திருமணம் செய்து கொண்ட இவர்கள் சில மாதங்கள் காதலுடனே வசித்து வந்துள்ளனர்.
விவாகரத்து மனு தாக்கல்:
விவாகரத்து மனு தாக்கல் செய்த நபரின் மனைவி தொடுபுழாவில் உள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். அதோடு அந்த நபர், விவாகரத்து மனுவில், திருமணத்திற்கு முன்பும் அதன் பின்னரும் தன்னுடைய மனைவி வாரிய அதிகாரி ஒருவருடன் தகாத உறவில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதோடு இவர்களின் உறவு தொடர்பான சாட்சியமாக அக்டோபர் 2012 மற்றும் ஜூலை 2013 ஆம் ஆண்டு வரை தன் மனைவிக்கு வந்த தொலைபேசி அழைப்பு பதிவுகள் அனைத்தையும் குடும்ப நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது மனைவியின் தரப்பில் இருந்து, 'உயர் அதிகாரியிடம் இருந்து அழைப்புகள் வருவது இயல்பு தானே' என கூறப்பட்டது.
தொலைபேசி தொடர்புகள் மட்டுமே ஆதாரமாக எடுத்து முடியாது:
ஆனால், உயர் நீதிமன்றமோ ஒரு நாளில் அடிக்கடியும், குறிப்பாக இரவு நேரங்களிலும் அடிக்கடி அழைப்புகள் வருவதாக சுட்டிக்காட்டியுள்ளது. இருப்பினும் கள்ளக்காதல் தொடர்பான இந்த விவாகரத்து மனுவிற்கு தொலைபேசி தொடர்புகள் மட்டுமே ஆதாரமாக எடுத்து முடியாது எனவும் நீதிமன்ற தரப்பில் கூறப்பட்டது.
ஆனால், மறுத்தரப்பில் இருந்து வாதாடிய பாதிக்கப்பட்ட கணவர் ஒருமுறை மனைவிக்கும் அதிகாரிக்கும் இடையேயான அந்தரங்க உரையாடலைக் கேட்டதாகவும், அவரது எச்சரிக்கையையும் மீறி அவர் தொடர்ந்து அழைத்து பேசினார் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
செல்போனில் பேசியுள்ளது உறுதி:
கடைசியில் தீர்ப்பின் போது உயர் நீதிமன்றம் கூறியதாவது, 'இரண்டாவது பிரதிவாதியுடன் (அதிகாரி) செல்போனில் பேசியது குறித்து கணவன் மனைவியிடம் கேள்வி எழுப்பியுள்ளார், அதன்பிறகு அதை நிறுத்த சொல்லியும் மனைவி மீண்டும் மீண்டும் அதை செய்தது ஏற்புடையது அல்ல. சோதனை செய்து பார்த்தபோது அவருடன் எல்லா நாட்களிலும், ஒரே நாளில் பல முறையும் செல்போனில் பேசியுள்ளது உறுதி செய்யப்படுகிறது.
எனவே இந்த சாட்சி வலுவாக இருக்கும் பட்சத்தில் இருவருக்கும் விவாகரத்து வழங்க நீதிமன்றம் சம்மதிக்கின்றது' என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தேர்தல் முடிவுகள்: திருவாரூரில் அசத்தி காட்டிய தம்பதி.. மிரண்டு போன அரசியல் கட்சிகள்
- கல்யாணம் முடிஞ்சு ஒரு மாசம் கூட சந்தோஷமா வாழல.. அதுக்குள்ள வாழ்க்கைய சுக்குநூறாக உடைத்த நபர்.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
- VIDEO: பிறந்தநாளுக்கு காஸ்ட்லியான ‘கிஃப்ட்’ கொடுத்த மனைவி.. எமோஷனல் ஆன கணவன்.. ‘செம’ க்யூட் மொமண்ட்..!
- இதுவரை 27 கல்யாணம் தான் சார் பண்ணியிருக்கேன்.. ஆமா 128 கிரெடிட் கார்டு எதுக்கு? போலீசாரை மிரள வைத்த முதியவர்
- 300 ரூபாய் கேட்டு மிரட்டிய நபர்.. மனைவி கண்முன்னே கணவருக்கு நேர்ந்த கொடூரம்..!
- ஜன்னல் இடுக்குகளில் ஒட்டப்பட்டிருந்த டேப்.. காற்று வெளிய போகக் கூடாது.. வீட்டுக்குள்ள இருந்த 4 பேர்.. குடும்பத்தோடு சாப்ட்வேர் என்ஜினீயர் எடுத்த சோக முடிவு
- கல்யாணம் முடிச்சிட்டு வர்ற வழியில்ல.. மனைவிக்கிட்ட கணவன் சொன்ன விஷயம்.. இப்படி ஒரு பிளானோடு தான் வந்து தாலி கட்டினாரா? மனைவி ஷாக்
- காதல் திருமணம் செய்த மூத்த மகள்.. மனவேதனையில் இருந்த தந்தை செய்த காரியம்.. அதிர்ச்சியில் உறைந்த கிராமம்..!
- இனி வெளிநாட்டு மாப்பிள்ளைன்னு சொன்னா ரெண்டு யோசிப்பாங்க போலயே.. RTI மூலம் தெரியவந்த அதிர்ச்சி தகவல்..!
- மனைவியும் பிரிஞ்சு போய்ட்டா.. இப்போ காதலியும் இல்ல.. வீடியோ காலில் பேசிய படி. இளைஞர் எடுத்த முடிவு