ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பெற்ற 42 வயது பெண்.. 17 வருச கண்ணீருக்கு முற்றுப்புள்ளி.. கணவர் வைத்த உருக்கமான வேண்டுகோள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

திருமணமாகி 17 வருடங்கள் குழந்தையில்லாத பெண்ணுக்கு ஒரு பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ளது.

Advertising
>
Advertising

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் அதிரம்புழ பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மனைவி பிரசன்னா குமாரி. இந்த தம்பதிகளுக்கு கடந்த 2005-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால் 17 வருடங்களுக்கு மேலாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து வந்தனர்.

இதனால் இந்த தம்பதி மனம் தளர்ந்திருந்து போயுள்ளனர். இந்த சூழலில் தான் தூய்மை பணியாளராக பணியாற்றும் தனியார் மருத்துவமனையில் உள்ள மகப்பேறு மருத்துவர்களிடம் மனைவியை சிகிச்சைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அவர்கள் அளித்த செயற்கை கருவூட்டல் சிகிச்சையின் மூலம், பிரசன்னா குமாரி கடந்த ஆண்டு கருவுற்றிருக்கிறார். குழந்தை இல்லாமல் தவித்து வந்த தம்பதிக்கு இந்த செய்தி பெரும் மகிழ்ச்சியை வழங்கியது. அன்றில் இருந்து மருத்துவரின் ஆலோசனை படி பாதுகாப்புடன் கண்ணும் கருத்துமாக தனது மனைவியை சுரேஷ் பராமரித்து வந்தார்.

இந்த நிலையில் பிரசன்ன குமாரிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. கணவர் சுரேஷ் கோட்டயத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கா அனுமதித்தார். பரிசோதனையில் பெண்ணின் வயிற்றில் 4 குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. பின்னர் அறுவை சிகிச்சை மூலம் 4 குழந்தைகளையும் பத்திரமாக மருத்துவர்கள் வெளியே எடுத்தனர். இதில் 3 ஆண் குழந்தைகளும், 1 பெண் குழந்தையும் பிறந்துள்ளது. தனது 42 வயதில் 4 குழந்தைகளை பெற்றதால் பிரசன்ன குமாரி பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். இதனை அடுத்து பெண் குழந்தைக்கு சுரேஷின் அம்மா பெயரான லட்சுமியும், ஆண் குழந்தைகளுக்கு சங்கரன், காசிநாதன், கார்த்திக் என பெயர் சூட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக கூறிய மருத்துவர் ஒருவர், ‘எங்கள் மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்தது இதுவே முதல்முறை.  அதனால் அந்தப் பெண்ணின் பிரசவ செலவின் ஒரு பகுதியை மருத்துவமனை நிர்வாகம் ஏற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளது. தற்போது 4 குழந்தைகளும், தாயும் நலமாக உள்ளனர்’ என அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், மனைவியின் பிரசவ செலவுக்காக வீட்டை 5 லட்சம் ரூபாய்க்கு அடமானம் வைத்துள்ளதாக சுரேஷ் தெரிவித்துள்ளார். மேலும் 4 குழந்தைகள் பிறந்துள்ளதால், அவர்களை பராமரிக்க வீட்டில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் வேலைக்கு செல்ல முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். அதனால் யாராவது பண உதவி செய்ய வேண்டும் என சுரேஷ் உருக்கமாக வேண்டுகோள் வைத்துள்ளார்.

KERALA, WOMAN, BABIES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்