'புல்வாமா' பயங்கரம்... வெடிமருந்துக்கு தேவையான 'ரசாயனங்களை'... 'எங்கு? எப்படி?' வாங்கினார்கள் எனத் தெரிந்தால் 'அதிர்ச்சி' கன்ஃபார்ம்...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

புல்வாமா தாக்குதலுக்கு பயன்படுத்த வெடிமருந்து தயாரிக்கும் ரசாயனங்களை தீவிரவாதிகள் அமேசான் ஆன்லைன் ஷாப்பிங்கில் வாங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

'புல்வாமா' பயங்கரம்... வெடிமருந்துக்கு தேவையான 'ரசாயனங்களை'... 'எங்கு? எப்படி?' வாங்கினார்கள் எனத் தெரிந்தால் 'அதிர்ச்சி' கன்ஃபார்ம்...

கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 14ம் தேதி, ஜம்மு காஷ்மீர், புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில், ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில், பாதுகாப்புப் படையினர் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் 40 பாதுகாப்புப் படையினர் வீர மரணம் அடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு ஜெய்ஸ்-இ-முகமது என்ற தீவிரவாதக் குழு பொறுப்பேற்றது.

இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவு (என்.ஐ.ஏ.,) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த பீர் தாரிக் மற்றும் அவரது மகள் இன்ஷா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.  இதற்கிடையே ஸ்ரீநகரை சேர்ந்த வெய்ஸ் உல் இஸ்லாம் மற்றும் புல்வாமாவை சேர்ந்த முகமது அப்பாஸ் ஆகிய இருவரையும் என்.ஐ.ஏ. கைது செய்தது.

அவர்களிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் வழிகாட்டுதல் படி, வெடிபொருள், பேட்டரி மற்றும் பிற உபகரணங்கள் தயாரிப்பதற்கு தேவையான ரசாயனங்களை அமேசான் ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் ஆர்டர் செய்து வாங்கியுள்ள தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவலை என்.ஐ.ஏ. அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

JAMMU KASHMIR, PULWAMA, BOMB ATTACK, AMAZON, MILITANTS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்