'எவ்வளவோ கெஞ்சினோம்.. ஆனா விடல'.. '6 கி.மீ நடந்தே போய்'.. கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஜம்மு காஷ்மீரில் 370, 35ஏ உள்ளிட்ட காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிடிவுகள் நீக்கப்படும்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து ஆதரவு கூட்டங்களும், எதிர்ப்புப் போராட்டங்களும் நிகழ்ந்தன. பாதுகாப்புப் படையினர் போராட்டக் காரர்களை எதிர்த்து தொடர் பெல்லட் குண்டுகளால் தாக்கினர். இதனால் பல போராட்டக் காரர்கள் கண்களை இழந்ததாக ஆங்கில இதழான தி வயர் தெரிவித்துள்ளது. இந்த நிலையில்தான் ஸ்ரீநகரைச்சேர்ந்த இன்ஷா அஷ்ரஃப் செனும் 26 வயது நிறைமாத கர்ப்பிணிக்கு, காலை 5.30 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

அப்போது வீட்டுக்கு அருகே உள்ள ஆட்டோ ஓட்டுநரிடம் இன்ஷாவின் தாயும், சகோதரியும் உதவி கேட்டதை அடுத்து 7 கி.மீ தொலைவில் இருக்கும் லால் டாட் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் சென்ற 500 மீ தூரத்திலேயே அவர்களின் ஆட்டோவை நிறுத்திவிட்டு, பாதுகாப்பு வீரர்கள் அவர்களின் வாகனத்தை அனுமதிக்காததால், 6 கி.மீ தூரம் வரை கர்ப்பிணி மகளை அழைத்துக்கொண்டு தாயும் மகளும் நடந்தே சென்று 11 மணிக்கு மருத்துவமனையை அடைந்ததாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. தாங்கள் எவ்வளோ எடுத்துக் கூறியும் அந்த பாதுகாப்பு வீரர்கள் ஆட்டோவை அனுமதிக்கவில்லை என்றும், ஒவ்வொரு 500 மீட்டருக்கும் ஒரு சோதனைச் சாவடியில் அனைவரும் பரிசோதனை செய்யப்பட்டதாகவும் அந்த பெண்மணி தெரிவித்துள்ளார்.

எனினும் இன்ஷா லால் டாட் மருத்துவமனையை அடைவதற்கு முன்னர் 500 மீ தூரத்திலேயே வலி பொறுக்காமல் விழுந்துவிட்டதால், அங்கிருந்த ஒரு மருத்துவமனைக்கு முதலில் கொண்டு செல்லப்பட்டு குழந்தை பெற்றெடுத்த பிறகு, லால் டாட் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். இதனிடையே செல்போன், தொலைத்தொடர்பு, இணையத் தொடர்பு என அனைத்தும் துண்டிக்கப்பட்டதால், கணவருக்குக் கூட அவரால் தகவல் கூற முடியவில்லை. குழந்தைக்கு துணிவாங்கவும் முடியவில்லை என வெதும்பி கூறியுள்ளார்.

KASHMIR, ARTICLE370, PREGNANT WOMAN, HOSPITAL, CURFEW

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்