'கொரோனாவுக்கே நாங்க டஃப் கொடுப்போம்'... 'கொரோனா வார்டில் நடந்த கிரிக்கெட் மேட்ச்'... பட்டையை கிளப்பும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நம்பிக்கை என்ற ஒற்றை சொல் போதும், நாம் எதையும் தாண்டி செல்லலாம் என்பதற்கு உதாரணமாக விளங்குகிறது தற்போது இணையத்தில் வைரலாகும் வீடியோ ஒன்று.

Advertising
Advertising

உலகையே ஆட்டம் காண வைத்துள்ள கொரோனா வைரஸ், இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் மொத்தம் 286579 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 9996 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

இதனிடையே கொரோனா வார்டில் மக்கள் தனிமையில் இருப்பதால் அவர்களுக்கு மன அழுத்தம் அதிகரிப்பதாகப் பலரும் தெரிவித்திருந்தனர். இதனைப் போக்கும் விதமாக சில இடங்களில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நடனமாடி நோயாளிகளை உற்சாகப்படுத்திய நிகழ்வுகளும் நடந்தன. ஆனால் அதை எல்லாம் மிஞ்சும் அளவிற்கு தற்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது.

காஷ்மீர் மாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வார்டில், கிரிக்கெட் விளையாடிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. பெரிய உள்விளையாட்டு அரங்கு ஒன்று கொரோனா வார்டாக மாற்றப்பட்டுள்ளது. அதில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கொரோனா பதித்தவர்கள் ஆனந்தமாக கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார்கள். கொரோனாவை எதிர்க்க மன வலிமையையும், நம்பிக்கையும் மிக முக்கியம் என்பதை இந்த வீடியோ உணர்த்துவதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்