"சீக்கிரமா வீட்டுக்கு வருவேன்னு அப்பா சொன்னாரு",.. ஆனா 'இறுதி'யில் 'நேர்ந்த' துயரத்தால்... சுக்குநூறான 'குடும்பம்'... தந்தையின் உடலுக்கு இறுதி சடங்கு செய்த 'இளம்பெண்'!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடக மாநிலம், சிக்கமகளூரு மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிரஹள்ளி கிராமத்தை சேர்ந்த 45 வயது ஆண் ஒருவர், ராம்நகர் மாவட்டம் பிடதி பகுதியில் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக வேலை பார்த்து வந்துள்ளார்.
இவருக்கு திருமணமாகி மனைவி உள்ள நிலையில், 2 மகள்கள் உள்ளனர். கொரோனா பரவல் காரணமாக 2 மகள்களையும் தங்களது சொந்த ஊரான முக்கிரஹள்ளி கிராமத்திற்கு அனுப்பி வைத்து விட்டு தனது மனைவியுடன் பிடதியில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில், அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அவரை பெங்களுர் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த 3 நாட்களுக்கு முன்பு வரை மகள்களுடன் வீடியோ காலில் பேசி வந்துள்ளார். தான் குணமடைந்து வருவதாகவும், விரைவில் வீடு திரும்புவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால், திடீரென சனிக்கிழமை இரவு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதில் அவரது உயிர் பிரிந்துள்ளது. இதனை அறிந்த மனைவி மற்றும் மகள்கள் கண்ணீர் விட்டுக் கதறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, அவரது உடல் சொந்த ஊரான முக்கிரஹள்ளி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்குள்ள மயானம் ஒன்றில் வைத்து அவரது உடலை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
அப்போது அந்த அதிகாரியின் மூத்த மகள், தனது தந்தைக்கு தானே இறுதிச்சடங்கு நடத்த அனுமதிக்க கோரினர். அதன்படி, தனது தந்தையின் இறுதி சடங்குகளை அந்த பெண் முழு பாதுகாப்பு உடை அணிந்து கொண்டு இறுதி சடங்குகளை மேற்கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "எங்களை அசிங்கப்படுத்துனதுக்கு வாழ்த்துக்கள்",,.. 'மாநகராட்சி'யை எதிர்த்து,, 'பேனர்' வைத்த 'குடும்பம்'... வைரலாகும் சம்பவம்... நடந்தது 'என்ன'???
- VIDEO: கன்னட திரையுலகில் பரபரப்பு!.. பூதாகரமாகும் போதை பொருள் விவகாரம்... ஜெயம் ரவி பட நடிகையிடம் கிடுக்கிப்பிடி விசாரணை!.. மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி!
- கர்நாடகாவில் பரபரப்பு!.. டிஜிபி மார்பில் பாய்ந்த துப்பாக்கி குண்டு!.. கண் இமைக்கும் நேரத்தில்... அரங்கேறிய சம்பவம்!.. திக் திக் நிமிடங்கள்!
- 'இது எப்படி பாசிபிள்?'... 'கொரோனாவிலிருந்து குணமடைந்த பெண்ணுக்கு'... 'டெஸ்ட் ரிப்போர்ட்டில் காத்திருந்த பெரிய ஷாக்!'...
- Darkweb-இல் கொடி கட்டி பறந்து... பெங்களூருவை அதிரவைத்த போதை மருந்து சாம்ராஜ்யம்!.. தமிழகத்தை சேர்ந்த நடிகை கைது!.. பகீர் தகவல்கள்!
- '38 வயது பெண்ணுடன் ஓடி வந்த இளைஞர்'... 'கொஞ்ச நேரத்துல திபு திபுவென போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த 5 ஆண்கள்'... யாருன்னு தெரிஞ்சதும் ஆடி போன போலீசார்!
- 'பையன் படிக்கறது 9வது, ஆனா'... 'மகனுக்கு கொரியரில் வந்ததை பார்த்து'.. 'ஷாக்கில் உறைந்துபோய் நின்ற தந்தை!'...
- 'நமக்கு குழந்தை இல்ல...' 'அவ மட்டும் குழந்தையோட ஜாலியா இருக்கா...' 'ஆளில்லாதாக நேரத்துல வீட்ல நுழைஞ்சு...' - வீட்டுக்கு போன போலீசாருக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி...!
- VIDEO: ’உலகின் டாப் 'தடகள' வீரருக்கு வந்த சோதனை’... ’வீரரின் சோகம் கலந்த நெகிழ்ச்சி உரை...’ - என்ன சொல்றார்ன்னு நீங்களே பாருங்க!
- "சினிமா 'ஷூட்டிங்' எப்போ ஸ்டார்ட் பண்ணலாம்??"... 'மத்திய' அரசு வெளியிட்ட 'முக்கிய' நெறிமுறைகள்!!!