VIDEO: ரொம்ப முக்கியமான 'ஒரு வேலை' சார்...! 'அதான் வெளிய வந்தேன்...' அப்படி என்னய்யா பெரிய முக்கியமான வேலை...? 'இதுக்கு மேல முடியாது, எடுத்து காட்டிட வேண்டியது தான்...' அடியாத்தி...! - வைரல் வீடியோ...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவிவரும் நிலையில், அம்மாநிலத்தில் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதோடு மட்டுமல்லாமல் அத்தியாவசிய சேவைகளை தவிர்த்து, அனாவசியமாக வெளியே சுற்றித் திரிவோரைப் பிடிக்க, பல்வேறு இடங்களில், சோதனைச் சாவடி மையங்களை அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மைசூர் மாளிகை அருகே காவல் துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த நபரை மடக்கி, அதிகாரிகள் விசாரித்தனர்.

அந்த இளைஞரோ ரொம்ப முக்கியமான ஒரு வேலையாக தான் வெளியே வந்ததாகக் கூறுகிறார். அப்படி என்ன முக்கியமான வேலை? அதற்கான ஆவணங்களை காட்டுமாறு கண்டிப்புடன் போலீசார் கேட்டுள்ளனர்.

பைக்கில் வந்த பாம்புகளை மீட்கும் வீரரான அந்த இளைஞர், வேறு வழியின்றி, பிடித்து வந்த நல்லப் பாம்பையே இரு சக்கர வாகனத்தில் இருந்து ஆவணமாக எடுத்துக் காட்டினார். இது தான் தன்னுடைய வேலை என விவரித்து கூறினார்.

பாம்பை கண்ட அதிகாரிகள், சுமார் ஐந்தடி பாம்பைக் கண்டதும், ஐந்தடி தூரம் தள்ளியே நின்று பேசினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்