குரான் வாசிச்ச அப்பறம் தான் தேரோட்டம்.. மத நல்லிணக்கத்திற்கு சாட்சி சொல்லும் பாரம்பரியம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கர்நாடக மாநிலத்தில் உள்ள கோவில் ஒன்றில் குரான் ஓதிய பிறகு தேரோட்டம் நடைபெறும் வழக்கம் நெடுங்காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | "ஒரு கஷ்டமும் வர கூடாது".. அம்மனுக்கு நடந்த அலங்காரம்.. அதுவும் ரூபா நோட்ல.. எவ்வளவு கோடி தெரியுமா? கோவையில் சுவாரஸ்யம்..!

பேலூர் கோவில்

கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தின் பேலூர் பகுதியில் இருக்கிறது சென்னகேசவா கோவில். 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹோய்சால மன்னனான விஷ்ணுவர்தன் சோழர்களின் மீது போர்தொடுத்து வெற்றிகண்டார். இதன் நினைவாக இந்த கோவிலை விஷ்ணுவர்தன் கட்டியதாக கூறப்படுகிறது. இந்த கோவிலில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வினோத பாரம்பரியம் ஒன்று பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் தேரோட்டம் விமர்சியாக நடைபெறுவது வழக்கம். அந்த திருவிழாவின் துவக்கமாக இங்கே இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை வாசிக்கிறார்கள். அதன்பிறகே இந்த பிரம்மாண்ட தேர் தனது பயணத்தை துவங்குகிறது.

தேரோட்டம்

உள்ளூர் மக்கள் மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த கோவிலுக்கு வருவது வாடிக்கை. கொரோனா காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக இந்த கோவிலின் பிரசித்திபெற்ற தேர் திருவிழா நடைபெறவில்லை. இந்நிலையில் நேற்று நடைபெற்ற தேர் திருவிழாவை காண திரளான மக்கள் கூடினர்.

திருவிழாவில் இஸ்லாமிய மதகுரு காசி சையத் சஜீத் பாஷா கலந்துகொண்டு குரான் வாசித்து தேரோட்டத்தை துவக்கிவைத்தார். இதுகுறித்து பாஷா பேசுகையில்," சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பாரம்பரியம் பின்பற்றப்பட்டு வருகிறது. கர்நாடகாவின் வேறு எந்த மாவட்டத்திலும் இப்படி வழக்கம் கிடையாது. மக்கள் ஒற்றுமையாகவும் மத நல்லிணக்கத்துடனும் இந்த திருவிழாவில் கலந்து கொள்கின்றனர்" என்றார்.

பாதுகாப்பு

இந்த பாரம்பரிய தேரோட்டம் குறித்து பேசிய முன்னாள் இந்திய பிரதமர் தேவகவுடாவின் மகன் ரேவண்ணா," கோவில்களில் காலங்காலமாக பின்பற்றப்பட்டுவரும் வழக்கத்தை மாற்றக்கூடாது. மாநிலத்தில் இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்துவர்களின் உரிமையை பாதுகாக்க வேண்டும். மதத்தின் அடிப்படையில் பிரிவினை ஏற்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்றார்.

இந்த கோவிலில் குரான் வாசிக்க கூடாது என பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், கோவில் நிர்வாகம் மற்றும் மாநில அரசு பாரம்பரிய பழக்க வழக்கத்தினை மாற்ற முடியாது என தெரிவித்திருந்த நிலையில் நேற்று வழக்கம்போல தேரோட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. மதங்களை கடந்து மனிதத்தை போற்றும் வகையில் நடைபெறும் இந்த திருவிழா குறித்து பலரும் சமூக வலைத் தளங்களில் நெகிழ்ச்சியுடன் பேசிவருகின்றனர்.

Also Read | "எனக்கு அவ தான் வேணும்".. தோழியை திருமணம் செய்துகொண்ட பெண் வைத்த கோரிக்கை.. நீதிமன்றம் வெளியிட்ட பரபரப்பு தீர்ப்பு..!

KARNATAKA TEMPLE, FESTIVAL, QURAN RECITATION, KARNATAKA CHENNAKESHAVA TEMPLE, பேலூர் கோவில், சென்னகேசவா கோவில், தேரோட்டம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்