Karnataka : ‘ஆதார் அட்டை இல்லாததால் திருப்பி அனுப்பப்பட்ட கர்ப்பிணி.?’.. தமிழ் பெண்ணுக்கு நேர்ந்த சோகம் .. தென்னிந்தியாவை உலுக்கிய துயரம்.!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கர்நாடகாவில் ஆதார் அட்டை இல்லை என்பதால் நிறைமாத கர்ப்பிணி தமிழ் பெண்ணுக்கு நேர்ந்த சோகம், நாட்டை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | ஒரே ஓவரில்.. நியூசிலாந்து அணிக்கு ஷாக் கொடுத்த அயர்லாந்து 'வீரர்'.. "பந்து ஒவ்வொண்ணும் ஒவ்வொரு ரகம்"

கர்நாடக மாநிலம், பெங்களூரை அடுத்த துமகூரு டவுன், பாரதிநகர் ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் வசித்து வந்தவர் கஸ்தூரி (வயது 30). தமிழ்நாட்டை சேர்ந்த இவர், தனது மகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்ததாக தெரிகின்றது. மேலும் கஸ்தூரியின் கணவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நோய்வாய்ப்பட்டு உயிரிழந்து போனதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கஸ்தூரிக்கு ஒரு சில தினங்கள் முன் திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அக்கம் பக்கத்தினர் சிலர் கஸ்தூரியை துமகூரு டவுனில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அந்த சமயத்தில் அங்கே பணியில் இருந்த மருத்துவர் மாநில தாய் - சேய் பாதுகாப்பு அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை கஸ்தூரியிடம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், அதில் எதுவும் கஸ்தூரியின் கையில் இல்லை என்றும் தெரிகிறது. இதனால், பிரசவ வலியில் அவதிப்பட்ட கஸ்தூரியை மருத்துவமனையில் அனுமதிக்க அந்த மருத்துவர் மறுத்ததாகவும் மருத்துவமனைக்கும் அழைத்து செல்ல அந்த மருத்துவர் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதன் பின்னர் மீண்டும் கஸ்தூரியை அவரது வீட்டிற்கே அக்கம் பக்கத்தினர் கொண்டு சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து, மீண்டும் கஸ்தூரிக்கு பிரசவ வலி அதிகரித்து, வலியின் காரணமாக அலறித் துடித்த கஸ்தூரிக்கு அதிக அளவு ரத்த போக்கு ஏற்பட்டதன் காரணமாக கஸ்தூரியும் மற்றும் அவரது சிசுக்களும் இறந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் சம்பவ இடத்திற்கு துமகூரு டவுன் போலீசார் விரைந்து சென்றனர்.மேலும் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி மஞ்சுநாத்தும் அங்கே சென்றுள்ளார். ஆதார் அட்டை இல்லை எனக்கூறி கஸ்தூரியை மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்த மருத்துவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் படியும் கஸ்தூரியின் உறவினர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்காத காரணத்தினால், நிறைமாத கர்ப்பிணி மற்றும் வயிற்றில் இருந்த இரண்டு சிசுக்களும் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சம்மந்தப்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read | IPL 2023 : சிஎஸ்கேல ஜடேஜா ஆடுவாரா, மாட்டாரா?.. தோனியின் விருப்பம் இது தான்.. தீயாய் பரவும் தகவல்!!

KARNATAKA, PREGNANT, PREGNANT WOMAN, HOSPITAL, AADHAAR REPORT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்