'6,000' கோழிகளை 'உயிருடன்' புதைத்த கொடுமை... 'மனித நேயமற்ற' செயலுக்கு வலுக்கும் 'கண்டனம்'... சமூக வலைதளத்தில் வெளியான 'வைரல் வீடியோ'...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கர்நாடகாவில் வியாபாரி ஒருவர் 6,000 கறிக்கோழிகளை உயிருடன் குழிக்குள் புதைக்கும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. வைரஸ் பரவலைத் தடுக்க அனைத்து நாடுகளும் போர்க்கால நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா குறித்து பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருவதால் அவற்றை கட்டப்படுத்த பல்வேறு நாடுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்தியாவில் இறைச்சி மூலம் கொரோனா பரவுவதாக பரப்பப்பட்ட வதந்தியால் கோழிக்கறி விலை வீழ்ச்சியடைந்தது. கடந்த வாரம் கிலோ 60 ரூபாய் வரை விற்கப்பட்ட கோழி இறைச்சி தற்போது மிகவும் குறைந்துள்ளது. கர்நாடகாவில் 10 ரூபாய் வரை விலை வீழ்ச்சியடைந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது கேரளாவில் பறவைக்காய்ச்சலும் பரவத் தொடங்கியுள்ளதால் கோழி இறைச்சி விற்பனை படுபாதாளத்திற்கு சென்று விட்டது.

இதனிடையே கர்நாடகாவின் நுல்சூர் பகுதியில் மகந்தர் என்ற வியாபாரி தன்னுடைய கோழிப்பண்ணையிலிருந்த 6,000 கறிக்கோழிகளை உயிருடன் புதைத்துள்ளார்

விலை வீழ்ச்சியடைந்ததால் கறிக்கோழிகளை பராமரிக்க உணவு மற்றும் மருத்துவத்திற்கு 6 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது எனக் குறிப்பிட்ட அவர்,  இந்த இழப்பை சமாளிக்க முடியாமல் கறிக்கோழிகளை உயிருடன் புதைக்க  முடிவெடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

கறிக்கோழிகள் உயிருடன் புதைக்கப்படும் வீடியோவையும் அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மகந்தரின் இந்த செயல் மனிதநேயமற்றது என்று பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

 

KARNATAKA, POULTRY FARMER, 6, 000 CHICKENS, BURIES ALIVE, MASS GRAVE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்