நான் பட்ட 'கஷ்டம்' அடுத்த தலைமுறை படக் கூடாது சார்...! 'இந்த நிலைமைலையும் அவர் செய்த மகத்தான காரியம்...' - 'பத்மஸ்ரீ' விருது பெற்றவர் குறித்த 'வியக்க' வைக்கும் பின்னணி...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கர்நாடக மாநிலம் மங்களூரு பகுதியில் உள்ள ஹரேகலா கிராமத்தைச் சேர்ந்தவர் 66 வயதான ஹஜப்பா. ஆரஞ்சு பழங்களை விற்பனை செய்து வரும் ஹஜப்பா தனியொருவராக பள்ளிக்கூடம் கட்டி டெல்லியில் பத்ம ஸ்ரீ விருது வாங்கியுள்ளார்.

Advertising
>
Advertising

பத்ம விருது அளிக்கும் அரங்கில் ஹஜப்பா செருப்பு கூட அணியாமல் சென்று விருது வாங்கிய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. என்னடா இது தெருக்களில் ஆரஞ்சு பழம் விற்பனை செய்பவரா பள்ளிக்கூடம் கட்டினார் என்ற வியப்பு அனைவரிடமும் உள்ளது.

இதற்கு காரணம் 1978-ஆம் ஆண்டு ஹஜப்பாவிற்கு நடந்த ஒரு சம்பவம் தான் அவரை பள்ளிக்கூடம் கட்டும் அளவிற்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது. தெரு ஓரங்களில் பழ வியாபாரம் செய்த ஹஜப்பாவிடம் வெளிநாட்டைச் சேர்ந்தவர் ஆரஞ்சு பழங்களின் விலை குறித்து அவரிடம் கேட்டுள்ளார்.

ஆனால், ஆங்கிலம், ஹிந்தி மொழிகள் தெரியாததால், அதற்கு ஹஜப்பாவால் பதில் கூறி வியாபாரம் செய்ய முடியவில்லை. இதனை குறித்து பல நாட்களாக யோசித்த ஹஜப்பா, தான் சந்தித்த இந்த இக்கட்டான சூழலை தனது கிராமத்தில் உள்ள எதிர்கால சந்ததியினர் எதிர்கொள்ளக்கூடாது என தன் கிராமத்தில் பள்ளிக் கூடம் கட்டி ஏழைக் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி அளிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்.

ஹஜப்பா முதலில் ஹரேகலா கிராமத்தில் பள்ளிக்கூடம் ஒன்றை கட்டி முடிந்ததால் அவர் 'ஹரேகலா ஹஜப்பா' என அனைவராலும் அழைக்கப்படுகிறார். அவர் ஹரேகலா கிராமத்தில் கட்டிய பள்ளிக்கூடம் ஒரு நாள் இரண்டு நாளில் முடியவில்லை. 1978-ல் முடிவு செய்த இந்த பள்ளிக்கூட கனவு, ஹஜப்பாவின் தொடர் முயற்சியாலும், முன்னாள் எம்.எல்.ஏ. யூ.டி..ஃபரீத் உதவியுடன் 2000-ம் ஆண்டு ஆரம்பப் பள்ளியைக் கட்டினார்.

முதலில் 28 மாணவர்கள் மட்டுமே பயின்றுவந்த அப்பள்ளியில் இப்போது 175 ஏழை மாணவர்கள் பயின்று வருகின்றனர். அவரது சேவையை பாராட்டும் வகையில், 2014-ம் ஆண்டு ஹஜப்பாவின் பெயர் பத்ம விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

பத்ம ஸ்ரீ விருது பெற்ற ஹரேகலா ஹஜப்பா 'அடுத்ததாக நான் கல்லூரிகளைக் கட்ட வேண்டும் விரும்புகிறேன். இதற்காக பலதரப்பில் இருந்து உதவிகள் வருகின்றன. அந்த பணத்தின் மூலம் கல்வி நிலையங்களைக் கட்டுவதற்கு நிலம் வாங்கத் திட்டமிட்டுள்ளேன். அதோடு, எங்கள் கிராமத்தில் 10-ம் வகுப்பு வரை உள்ள பள்ளிக் கூடத்தை 12-ம் வகுப்பு வரை உயர்த்த உதவ வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன்' எனக் கூறியுள்ளார்.

KARNATAKA, ORANGE SELLER, PADMA SHRI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்