அடிக்கடி மிக்சி, மசாலாவுடன் EB ஆபிஸ் போகும் நபர்.. காரணத்தைக் கேட்டு வியந்து பார்க்கும் நெட்டிசன்கள்..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கர்நாடக மாநிலத்திலுள்ள கிராமம் ஒன்றைச் சேர்ந்த நபர் ஒருவர், அருகே அமைந்துள்ள மின்சார வாரியம் ஒன்றில் தினந்தோறும் மிக்சி உள்ளிட்ட பொருட்களுடன் சென்று கொண்டிருக்கும் நிலையில், இதற்கான காரணம் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "ஒரு டிகிரி வாங்குறதுக்குள்ள நான் பட்ட பாடு இருக்கே.." காலேஜ் பட்டம் பெற்ற பூனை??.. இணையத்தில் வைரலாகும் ஃபோட்டோ.. பின்னணி என்ன??

கர்நாடக மாநிலம், ஷிவமோக்கா மாவட்டத்தில் அமைந்துள்ளது, மங்கோடே என்னும் கிராமம். இந்த பகுதியைச் சேர்ந்தவர் ஹனுமந்தப்பா.

இவரது வீட்டில் கடந்த சில மாதங்களாகவே, தினந்தோறும் மின்சார தடை தொடர்ந்து இருந்துள்ளது. அதாவது, ஒரு நாளைக்கு சுமார் 5 முதல் 6 மணி நேரம் தான் மின்சாரம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

அடிக்கடி கரண்ட் கட்..

இது தொடர்பாக, தனது பகுதியில் அமைந்துள்ள மின்சார வாரியத்தில் புகாரையும் தொடர்ந்து அளித்து வந்துள்ளார் ஹனுமந்தப்பா. ஆனாலும், எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. அப்படி ஒரு சூழ்நிலையில், மின்சார வாரியத்தின் உயர் அதிகாரி ஒருவரிடமும் கேள்வி கேட்டுள்ளார் ஹனுமந்தப்பா.

இதன் பெயரில், இருவருக்கும் வாக்குவாதம் உருவாகி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இருவரும், பேசிக் கொண்டிருந்த போது, ஹனுமந்தப்பா அந்த அதிகாரியிடம் நாங்கள் எப்படி மசாலாவை அரைத்து, சமையல் செய்வோம் என்றும், மொபைல் போன் சார்ஜ் செய்வது எப்படி என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். இதற்கு கோபத்தில் பதில் சொன்ன அந்த அதிகாரி, அப்படி என்றால் மின்சார வாரிய அலுவலகம் சென்று, மின்சாரம் பயன்படுத்தி, மசாலா அரைத்துக் கொள்ளுங்கள் என கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

மிக்சி, மொபைலுடன் நடை..

இதனை நிஜமாகவே எடுத்துக் கொண்ட ஹனுமந்தப்பா, நாள் தோறும் மிக்சி, மொபைல் போன் மற்றும் சார்ஜரை எடுத்துக் கொண்டு, மின்சார வாரியம் சென்று மின்சாரம் பயன்படுத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும், சீனியர் அதிகாரி கூறியதன் பெயரில், மற்ற ஊழியர்கள் யாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

ஏறக்குறைய தனது வீட்டில் இருந்து மிக்சி, செல்போனுடன் நடந்தே மின்சார வாரியம் செல்வதை வழக்கமாக கொண்டுள்ள ஹனுமந்தப்பாவை, சில சமயங்களில் அப்பகுதி மக்கள், பைக்கில் லிப்ட் கொடுத்தும் மின்சார வாரியமத்திற்கு கொண்டு சேர்த்து வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, அதிகாரி தரப்பில் இருந்து வெளியான தகவலின் படி, மின்சார கோளாறு காரணமாக, இந்த பிரச்சனை உருவானதாகவும், விரைவில் ஹனுமந்தப்பாவின் வீட்டிலுள்ள மின்சாரம் தொடர்பான பிரச்சனைகள் சரி செய்யப்படும் என்றும் கூறியதாக தெரிகிறது. அதே போல, சமீப காலமாக பெரிய அளவில் மின்சார வாரியத்திற்கு ஹனுமந்தப்பா செல்வதில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

இது தொடர்பான செய்திகள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வரும் நிலையில், பலரும் இதுபற்றி தங்களின் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Also Read | வருங்கால கணவரை கைது செய்து.. பாராட்டுக்களை பெற்ற பெண் எஸ்.ஐ.. ஒரே மாதத்தில் நடந்த பரபரப்பு ட்விஸ்ட்..

KARNATAKA, MAN, ELECTRITY OFFICE, POWER CUT, FREQUENT POWER CUT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்