ஐடி வேலையை விட்டுட்டு கழுதை வளர்க்க போன நபர்.. கைகொடுத்த தொழில்.. மனுஷன் இப்போ லட்சாதிபதி..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடக மாநிலத்தில் ஐடி வேலையை விட்டுவிட்டு கழுதை வளர்ப்பில் ஈடுபட்டு வரும் நபர் லட்சக்கணக்கில் லாபம் ஈட்டிவருகிறார். இது பலரையும் வியப்படைய செய்திருக்கிறது.
கல்வியை முடித்தபிறகு சமூகம் தரும் அழுத்தங்களால் வேலைகளுக்கு செல்பவர்களுக்கு மத்தியில், காத்திருந்து தங்களுடைய கனவுகளுக்காக போராடுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதுவும், தற்போது பார்க்கும் வேலையை விட்டுவிட்டு தொழில் துவங்க செல்லும் நபர்களை பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால், துவங்க இருக்கும் தொழிலில் உள்ள ஏற்ற இறக்கங்கள் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளாமல் இப்படியான முயற்சிகளை மேற்கொள்வது ஆபத்தானது என தொடர்ந்து நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். ஆனால், கர்நாடகாவை சேர்ந்த ஒருவர், படிப்படியாக கழுதை வளர்ப்பு குறித்து அறிந்த பின்னர் தைரியமாக தனது ஐடி வேலையை விட்டுவிட்டு தொழில் துவங்கியுள்ளார்.
கழுதை வளர்ப்பு
கர்நாடகாவின் தட்சிண கன்னடா பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீனிவாஸ் கவுடா. BA பட்டதாரியான கவுடா, 2020 ஆம் ஆண்டில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியிலிருந்து விலகிய பிறகு ஐரா கிராமத்தில் 2.3 ஏக்கர் நிலத்தில் ஒருங்கிணைந்த விவசாயம், கால்நடை பராமரிப்பு, கால்நடை சேவைகள், பயிற்சி மற்றும் தீவன மேம்பாட்டு மையமான ஐசிரி பண்ணையை தொடங்கினார். ஏற்கனவே முயல்கள் மற்றும் கடக்நாத் கோழிகளை வளர்க்கும் அந்த பண்ணையில் கழுதைகளையும் வளர்க்க திட்டமிட்டிருக்கிறார் கவுடா.
அதன்படி 20 கழுதைகளை அவர் வாங்கி வளர்க்க துவங்கியுள்ளார். இந்தியாவில் கழுதைகளின் எண்ணிக்கை குறைவு என்பதால் கழுதை பால் வியாபாரம் செய்ய நினைத்த இவருக்கு நல்ல நல்ல லாபமும் கிடைத்திருக்கிறது. சந்தையில் 30 மிலி கழுதை பால் 150 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. இதனை கவனித்த கவுடா, தன்னுடைய கழுதை பால் வியாபாரத்தை பெரிதுபடுத்தியுள்ளார். தற்போது 17 லட்ச ரூபாய்க்கும் அதிகமான ஆர்டர்கள் தனக்கு கிடைத்துள்ளதாக பெருமையுடன் கூறுகிறார் கவுடா.
சூடுபிடித்த வியாபாரம்
இதுபற்றி பேசிய அவர்,"கழுதை பால் ஆரோக்கியம் நிறைந்தது. மருத்துவ குணம் உள்ளது. தொடக்கத்தில், கழுதை வளர்ப்பு தொழிலுக்கு ஆதரவு கிடைக்காமல் இருந்தது. ஆனால், இப்போது நல்ல நிலையில் இருக்கிறது. இதுபோல பண்ணை துவங்க சிலர் ஆலோசனை கேட்டு வருகிறார்கள். அவர்களுக்கும் நாங்கள் பயிற்சி அளிக்கிறோம்" என்றார். கழுதை வளர்ப்பு குறித்து பலநாட்கள் தீவிரமாக ஆய்வுகளை மேற்கொண்ட பிறகே, கவுடா இந்த தொழிலில் இறங்கியுள்ளார். அதனாலேயே அவருக்கு வெற்றி வசப்பட்டிருக்கிறது.
Also Read | அடி தூள்.. "சென்னையில் 2 வது ஏர்போர்ட் இங்க தான்".. விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு..!
மற்ற செய்திகள்
குரங்கு அம்மைக்கு இந்தியாவில் முதல் உயிரிழப்பு.. விசாரணை தீவிரம்.. சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவு..!
தொடர்புடைய செய்திகள்
- "இறந்து போனவங்களுக்கு.." 30 வருஷம் கழிச்சு நடக்கும் கல்யாணம்.." வியந்து பார்க்க வைக்கும் வினோத சடங்கு!!
- வீட்டு வாசல்ல சோர்வாக நின்ன கிளி.. காப்பாத்தியவருக்கு அடிச்ச அதிர்ஷ்டம்.. கர்நாடகாவில் நடந்த சுவாரஸ்யம்..!
- அமர்க்களமா நடந்த கல்யாணம்.. "வரவேற்பு மேடையில, திடீர்ன்னு இப்படி நடந்து போச்சு.." கதறித் துடித்த கிராமம்
- Toll Gate-ஐ வேகமாக நெருங்கிய ஆம்புலன்ஸ்.. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த பேரதிர்ச்சி.. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்
- "மனைவிய ATM மாதிரி Use பண்ணிருக்கீங்க".. விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு போன பெண்.. நீதிபதி வழங்கிய அதிரடி தீர்ப்பு..!
- சோகத்தில் முடிந்த கிக்பாக்சிங் போட்டி.. கோமா நிலைக்கு போன இளம் வீரருக்கு நேர்ந்த துயரம்..!
- "இறந்த உடலை தோண்டி எடுத்ததுக்கு அப்புறம்.." மழை வர வைக்க வினோத சடங்கு.. பரபரப்பை உண்டு பண்ணும் கிராம மக்கள்
- "அப்பா என்ன கடத்திட்டாங்க.. 5 லட்சம் வேணுமாம்".. போனில் அழுத மகன்.. போலீஸ் விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மை..!
- "தொண்டை வலி உசுரு போகுது டாக்டர்.." அப்படி என்ன தான் இருக்குன்னு.. X ray எடுத்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..
- செல்ல நாய்க்கு பிறந்தநாள்.. 100 கிலோவில் கேக்.. 4000 பேருக்கு விருந்து போட்ட தொழிலதிபர்.. மிரண்டுபோன பொதுமக்கள்..!