"விவாகரத்து வேண்டாம்".. சமரசம் செய்து அனுப்பிய நீதிபதிகள்.. வெளிய வந்த உடனே கணவர் செஞ்ச காரியம்.. வெலவெலத்துப்போன மக்கள்.!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கர்நாடகாவில் ஒரு தம்பதியரின் விவாகரத்து மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த நிலையில் நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்ததும் மனைவியை கணவன் தாக்கிய சம்பவம் அம்மாநிலத்தையே அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | 75 பைசாவுக்கு சிக்கன் பிரியாணி.. அலைமோதிய கூட்டம்.. பிரியாணியுடன் சுதந்திர தின விழாவை கொண்டாடிய மக்கள்..!

கர்நாடகா மாநிலத்தின் ஹோலேநரசிபுரா தாலுகாவைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவருக்கும் தட்டேகெரே கிராமத்தை சேர்ந்த சைத்ரா என்பவருக்கும் 7 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இந்த தம்பதிக்கு ஒரு மகள் இருக்கும் நிலையில் இருவருக்குள்ளும் அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக இருவர்க்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.

விவாகரத்து

இதனிடையே விவாகரத்து கோரி நீதிமன்றத்துக்கு சென்றிருக்கிறது இந்த தம்பதி. இந்த மனுவின் மீதான விசாரணை ஹோலேநரசிபுரா நகர நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அப்போது  லோக் அதாலத் மையத்தில் இருவரும் சேர்ந்து வாழும்படியும், தங்களுடைய மகளின் எதிர்காலத்தை நினைவில் கொண்டு விவாகரத்து மனுவை திரும்பிப் பெறுமாறும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. இதனை இருவர் தரப்புமே ஏற்றுக்கொண்டிருக்கிறது. மேலும், ஒன்றாக வாழவும் இருவரும் சம்மதம் தெரித்துள்ளனர்.

அதிர்ச்சி

இதனையடுத்து நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியே வந்த உடனேயே அங்கிருந்த கழிவறைக்கு சென்றிருக்கிறார் சைத்ரா. அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற சிவகுமார் அவரை கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த அவர் அங்கேயே மயங்கி விழுந்திருக்கிறார். மேலும் தனது மகளையும் அவர் தக்க முற்பட்டிருக்கிறார் ஆனால் சத்தம் கேட்டு ஓடிவந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். இதனையடுத்து, ஹசன் மாவட்ட மருத்துவமனைக்கு சைத்ரா அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்திருக்கின்றனர். இதனையடுத்து அவருடைய உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

கைது

இதனிடையே, நீதிமன்ற வளாகத்திற்குள் தனது மனைவியை கடுமையாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்ற சிவகுமாரை அங்கிருந்த பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடத்தில் ஒப்படைத்திருக்கின்றனர். இந்நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விவாகரத்து மனுவை திரும்ப பெற்று ஒன்றாக வாழ சம்மதம் தெரிவித்துவிட்டு அடுத்த கணமே மனைவியை கணவர் கொலை செய்த சம்பவம் அம்மாநிலம் முழுவதும் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.

Also Read | ஒரேயொரு ஸ்பெல்லிங் மிஸ்டேக்.. 50 மில்லியன் டாலர் சொத்துக்கு அதிபதியான பெண்.. குழம்பிப்போன அதிகாரிகள்.!

KARNATAKA, MAN, HIT, WIFE, DIVORCE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்