கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தாக்கும் தோல் பூஞ்சை நோய்.. இந்தியாவில் முதல்முறையாக ஒருவருக்கு பாதிப்பு..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவில் முதல்முறையாக கொரோனா நோயாளிக்கு தோல் பூஞ்சை நோய் தாக்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை, கருப்பு பூஞ்சை தாக்குவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்தது. தற்போது இதற்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, கருப்பு பூஞ்சை பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறையாக உள்ளவர்கள், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஸ்டீராய்டு எடுத்துக்கொள்பவர்களை இந்த கருப்பு பூஞ்சை எளிதாக தாக்குவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா நோயாளி ஒருவருக்கு தோல் பூஞ்சை நோய் தாக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம், சிக்கலாபுரா கிராமத்தைச் சேர்ந்த 50 வயது நபர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனை அடுத்து அவர் கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில், அவரது காது பகுதியில் பூஞ்சை உருவாகி இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அவருக்கு தோல் பூஞ்சை நோய் தாக்கி இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இந்த தோல் பூஞ்சை நோயை அறுவை சிகிச்சையின் மூலம் குணப்படுத்திவிடலாம் என்றும், இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவாது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கருப்பு, வெள்ளை, மஞ்சை என பூஞ்சை நோய்கள் தாக்கி வந்த நிலையில், இந்தியாவில் ஒருவருக்கு தோல் பூஞ்சை நோய் தாக்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்