"தொண்டை வலி உசுரு போகுது டாக்டர்.." அப்படி என்ன தான் இருக்குன்னு.. X ray எடுத்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தொண்டை வலியின் பெயரில், வியாபாரி ஒருவருக்கு வீக்கம் ஏற்பட்டதன் பெயரில், அவர் மருத்துவமனையை நாடி இருந்ததை அடுத்து, எக்ஸ் ரே எடுத்து பார்த்த மருத்துவர்கள், ஒரு நிமிடம் அதிர்ந்து போயினர்.

Advertising
>
Advertising

Also Read | "அவுட் பண்ணா இப்டி தான் பண்ணுவீங்களா??.." மைதானத்தில் நடந்த சர்ச்சை.. மனம் வருந்தி மன்னிப்பு கோரிய CSK வீரர்.!

கர்நாடக மாநிலம் பெலஹாவி பகுதியில் 45 வயதான வியாபாரி ஒருவர் வாழ்ந்து வருகிறார். இவர் தினமும் தனது தொழிலுக்காக கிளம்புவதற்கு முன்பு, தனது வீட்டில் உள்ள பூஜை அறையில் சாமி தரிசனம் செய்துவிட்டு வேலைக்கு கிளம்பி செல்வது வழக்கமாக கொண்டுள்ளார்.

அதே போல, பூஜை முடிந்த பிறகு அங்கே பக்கத்தில் இருக்கும் பூஜை தீர்த்தத்தையும் குடித்துவிட்டு செல்வதையும் அவர் வழக்கமாகக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திடீர்ன்னு உருவான தொண்டை வலி..

மேலும், அந்த பூஜை தீர்த்த பாத்திரத்தில் கிருஷ்ணர் சிலை ஒன்றையும் அந்த வியாபாரி போட்டு வைத்துள்ளார். அப்படி, ஒரு நாள் தீர்த்தத்தை குடிக்கும் போது அந்த கிருஷ்ணர் சிலையும் அவரது வாய்க்குள்ளே சென்று சிக்கி உள்ளது. இதன் காரணமாக, அவரது தொண்டையில் பலமான வலி ஏற்பட்டது மட்டுமில்லாமல், தொண்டை வீக்கமும் உருவாகி உள்ளது. இதனால், உடனடியாக மருத்துவமனையை நாடிய வியாபாரி, தனது தொண்டை வீக்கம் குறித்து மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அந்த நபரை பரிசோதித்த மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்து உள்ளனர்.

சிக்கிய கிருஷ்ணர் சிலை

அப்போது தான், அவரது தொண்டையில் கிருஷ்ணர் சிலை ஒன்று சிக்கி இருப்பதைக் கண்டு கடுமையாக அதிர்ந்து போயினர் மருத்துவர்கள். அந்த கிருஷ்ணர் சிலையை அறுவை சிகிச்சை செய்து தான் எடுக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, அந்த நபருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில், மிகவும் வெற்றிகரமாக கிருஷ்ணர் சிலையை தொண்டையிலிருந்து மருத்துவர்கள் அகற்றி உள்ளனர்.

வழக்கம் போல தீர்த்தம் குடித்த நேரத்தில், கிருஷ்ணர் சிலை தவறுதலாக உள்ளே சென்றிருந்த நிலையில், மிகவும் பத்திரமாக அவர் மீட்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. அதே போல, உணவுக் குழாய்க்குள் நீட்டிக் கொண்டிருந்த கிருஷ்ணரின் காலை அகற்றுவது தான், சற்று கடினமாக இருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இது தொடர்பான புகைப்படம் மற்றும் செய்தி, தற்போது இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | விமானத்தில்.. அடுத்தடுத்து மயங்கிய பயணிகள்.. நடுவானில் அரங்கேறிய பரபரப்பு.. பின்னணி என்ன??

KARNATAKA, KARNATAKA KRISHNA STATUE, MAN THROAT, DOCTOR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்