சோகத்தில் முடிந்த கிக்பாக்சிங் போட்டி.. கோமா நிலைக்கு போன இளம் வீரருக்கு நேர்ந்த துயரம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற கிக் பாக்சிங் போட்டியில், இளம் வீரர் ஒருவர் மரணமடைந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | திருமணத்தை மீறிய உறவில் வந்த சிக்கல்.?.. சோகத்தில் மூழ்கிய இரண்டு குடும்பங்கள்.. திருச்சியில் பரபரப்பு..!

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவின் ஞான ஜோதி நகரில் உள்ள பாய் சர்வதேச வளாகத்தில் மாநில அளவிலான கிக் பாக்சிங் குத்துச் சண்டை போட்டிகள் நடைபெற்றன. இதில் மைசூரை சேர்ந்த விமலா - சுரேஷ் தம்பதியின் இளைய மகனான நிகில் என்பவர் கலந்துகொண்டார். இந்நிலையில் கடந்த 10 ஆம் தேதி நடந்த போட்டியில் 23 வயதான நிகில் மற்றொரு வீரரை எதிர்த்து விளையாடினார்.

அதிர்ச்சி

போட்டியின்போது, நிகிலை மற்றொரு வீரர் தாக்கவே, அவர் நிலைதடுமாறி கீழே விழுந்திருக்கிறார். இதனால் நடுவர் உள்ளிட்ட அங்கிருந்த நபர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனை தொடர்ந்து நிகில் சுயநினைவை இழந்ததால் அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதனை தொடர்ந்து பெங்களூரு நகராபவியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நிகிலை அனுமதித்தனர். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நிகில் கோமாவுக்கு சென்றுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர் இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நிகில் உயிரிழந்திருக்கிறார்.

போன்கால்

இந்நிலையில் இதுகுறித்து பேசிய நிகிலின் தயார் விமலா," கடந்த ஜூலை 10 ஆம் தேதி மாலை 6 மணிக்கு எனது செல்போனுக்கு கால் வந்தது. எதிர்புறத்தில் பேசியவர் எனது மகனுக்கு போட்டியின்போது பலத்த காயம் ஏற்பட்டதாக கூறினார். நாங்கள் உடனேயே மருத்துவமனைக்கு விரைந்து சென்றோம்" என்றார். மேலும், விழா ஒருங்கிணைப்பாளர்கள் மீது குற்றம் சுமத்தியுள்ள நிகிலின் தந்தை சுரேஷ்,"குத்துச்சண்டை நடைபெற்ற அரங்கில் இருந்த விரிப்புகள் மெல்லியதாக இருந்தது. இதனால் கீழே விழும் வீரர்களுக்கு கூடுதலாக காயம் ஏற்படும். அதுமட்டுமல்லாமல் போட்டி நடைபெற்ற இடத்தில் மருத்துவர்களோ, உயிர்காக்கும் உபகாரணங்களோ இல்லை. போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் நிகிலுக்கு முதலுதவி செய்யவில்லை" என்றார்.

வழக்கு பதிவு

இதனை தொடர்ந்து, ஞான பாரதி காவல்துறை அதிகாரிகள் போட்டி ஏற்பாட்டாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுவருவதாக தெரிவித்துள்ளனர். பெங்களூருவில், நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில், இளம் வீரர் ஒருவர் உயிரிழந்திருப்பது அப்பகுதி முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | "பொதுமக்கள் கிட்ட பேசுறப்போ சிரிச்சு தான் பேசணும்.. இல்லைன்னா 6 மாசம் சம்பளம் கட்".. அரசு ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு போட்ட மேயர்.. எங்கப்பா இருக்கு அந்த நாடு..?

KARNATAKA, KICKBOXER, COMA, INJURY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்