'சசிகலா விவகாரத்தில் கெத்து காட்டிய ரூபா ஐபிஎஸ்'... 'அதிரடியாக மாற்றம்'... ஆனால் காத்திருந்த சர்ப்ரைஸ்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடக மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரி ரூபா உட்பட 17 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து எடியூரப்பா அரசு உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக மாநில அரசு 17 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. பெங்களூரு மாநகர காவல்துறையில் 5 துணை ஆணையாளர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். இதனிடையே ரயில்வே துறை ஐ.ஜியாக பணியாற்றி வந்த ரூபா ஐபிஎஸ் மாநில அரசின் உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் கர்நாடகாவில் உள்துறை செயலாளராகப் பதவியேற்ற முதல் பெண் என்ற பெருமையை டி.ரூபா ஐபிஎஸ் பெற்றுள்ளார்.
ரூபா ஐபிஎஸ் இந்த பெயரைக் கேள்விப்படாதவர்களே இருக்க முடியாது. கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலையில் கர்நாடக மாநில சிறைத்துறை டிஐஜியாக நியமிக்கப்பட்ட நேரத்தில், அப்போது சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்த மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிற்கு விஐபி சலுகைகள் அளிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. இதுகுறித்த விவரங்களை ரூபா ஐபிஎஸ் தெரியப்படுத்த அது நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் சசிகலா சிறையில் விருப்பம் போல இருக்க, கர்நாடக சிறைத்துறை டிஜிபி சத்திய நாராயணா ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாகப் பகிரங்கமாகத் தெரிவித்தார்.
ரூபா வெளியிட்ட தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் தமிழகம் முழுவதும் பிரபலமானார். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய் குமார் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அவர்கள் தாக்கல் செய்த அறிக்கையில் டி.ரூபா முன்வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபணமானதாகத் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே பெங்களூருவில் ரயில்வே துறை ஐ.ஜியாக பணியாற்றி வந்த ரூபா ஐபிஎஸ் தற்போது கர்நாடக மாநில அரசின் உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பதவியாகக் கருதப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'காதல்' திருமணம் செய்த பெண் குத்திக்கொலை... 'கணவர்' உட்பட 2 பேர் கைது!
- '8 வருட காதல்'... 'திடீரென காதலன் போட்ட கண்டீஷன்'... 'காதலி எடுத்த விபரீத முடிவு'... இறுதியில் காத்திருந்த சர்ப்ரைஸ்!
- “சூட்கேஸில் இளம் பெண்ணின் சடலம்!.. அடையாளம் காட்டிய தாய்... கணவர் கைது.. போலீஸாருக்கு பரிசு!”.. எல்லாம் முடிந்து த்ரில்லர் பட பாணியில் கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- 'கல்யாண' மாலை கூட காயல... ஆடிக்கு 'அனுப்பி' வச்சா இப்படி பண்ணிட்டாளே... புது மாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு!
- சுஷாந்த் வழக்கிற்காக 1800 கி.மீ டிராவல் செய்த... ஐபிஎஸ் அதிகாரியை கட்டாயமாக 'தனிமைப்படுத்திய' அதிகாரிகள்... வெளியான ஆதாரம்!
- சுஷாந்த் கடைசியா Google-ல 'இதைத்தான்' தேடுனாரு... ஷாக் கொடுத்த கமிஷனர்!
- 'கர்நாடக முதல்வர் எடியுரப்பாவிற்கு கொரோனா தொற்று உறுதி...' 'அவரைத் தொடர்ந்து மகளுக்கும் கொரோனா...' மருத்துவமனையில் அனுமதி...!
- நடுராத்திரி பெரிய 'சூட்கேஸ்' எடுத்துட்டு கார்ல போனாங்க... சுஷாந்த் வழக்கில் புதிய திருப்பம்... கண்டுபிடிக்க முடியாமல் 'திணறும்' போலீஸ்!
- எப்போ பார்த்தாலும் 'டார்ச்சர்' தான்... கடைசியா எவ்ளோ 'சொல்லி'யும் கேட்கல.. கணவரை கொலை செய்தது ஏன்?... ஆசிரியை அதிர்ச்சி வாக்குமூலம்!
- “4500 ரூபா போச்சு.. நிறைய பேர ஏமாத்துறாங்க!”.. ‘வீட்டு வேலைக்கு’ ஆள் தேடிய ‘ஐடி ஊழியருக்கு’ பெண் கொடுத்த ‘ஷாக்’!