அமர்க்களமா நடந்த கல்யாணம்.. "வரவேற்பு மேடையில, திடீர்ன்னு இப்படி நடந்து போச்சு.." கதறித் துடித்த கிராமம்

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பொதுவாக திருமணம் என்றாலே ஒருவரின் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு நகரக்கூடிய ஒரு முக்கியமான தருணமாக பலரும் பார்த்து வருகிறார்கள்.

Advertising
>
Advertising

அப்படிப்பட்ட திருமண நிகழ்வின் போது, எதிர்பாராதவிதமான சம்பவங்கள் நடைபெறுவது குறித்து நாம் நிறைய செய்திகள் படித்திருப்போம்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட, மேடைக்கு வரும்போது மணமகன் குடித்துவிட்டு வந்ததாக திருமணத்தை மணப்பெண் நிறுத்தியது, மாப்பிள்ளை மேடைக்கு வர தாமதமானதால், உறவினர் தனது மகளை நபர் ஒருவர் திருமணம் செய்து வைத்தது என திருமண மேடை அல்லது திருமண நிகழ்வின் போது நடைபெறும் பல விதமான செய்தி மற்றும் வீடியோக்களை நாம் பார்த்திருப்போம்.

இந்நிலையில், தற்போது கர்நாடக மாநிலத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றின் போது நிகழ்ந்த சம்பவம், பலரையும் கண் கலங்க செய்துள்ளது. கர்நாடக மாநிலம், விஜயநகரா மாவட்டத்தில் அமைந்துள்ள ஹாஸ்பேட்டை அருகே பாப்பநாயக்கனஹள்ளி என்னும் கிராமம் உள்ளது. அங்கே, ஹொன்னூர சாமி என்ற வாலிபருக்கும், இளம் பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.

தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் வைத்து, ஹொன்னூர சாமி மற்றும் இளம் பெண்ணுக்கு திருமணமும் நடந்துள்ளது. மணமக்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரும் பங்கு பெற்று, திருமணமும் மிக அமர்க்களாகமாக நடந்து முடிந்ததாக கூறப்படுகிறது.

திருமணத்தை தொடர்ந்து ஹொன்னூர சாமியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில், மணமகன் சாமிக்கு நெஞ்சு வலியும் உருவாகி உள்ளது. நெஞ்சை பிடித்துக் கொண்டு அவர் மேடையில் நின்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. முதலில் ஏதோ சாதாரண வலியாக இருக்கும் என்றும் அவர் கருதி உள்ளார்.

அப்போது தான், யாரும் எதிர்பாராத ஒரு அசம்பாவிதம் அங்கே நடந்துள்ளது. மேடையில் நின்று கொண்டிருந்த மணமகன் ஹொன்னூர சாமி ,திடீரென நிலை தடுமாறி கீழே விழவும், அவரை உறவினர்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர். நெஞ்சு வலி மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் காரணமாக, சாமி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. மருத்துவர்கள் அவரைக் காப்பாற்ற செய்த முயற்சிகள் அனைத்துமே வீணானது.

மணமகன் உயிரிழந்த தகவலறிந்த மணப்பெண் மற்றும் மணமக்களின் குடும்பத்தினரும் கதறி துடித்தனர். திருமண கோலம் பூண்டு கோலாகலமாக இருந்த அந்த பகுதி, மாப்பிள்ளையின் மறைவால் சோகத்தில் மூழ்கி போனது.

MARRIAGE, GROOM, KARNATAKA, HOSPET

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்