'ஸ்டூடண்ட்ஸ்' தான் முக்கியம்... 1 முதல் 6-ம் வகுப்புகள் வரை 'தேர்வுகள்' ரத்து... அதிரடி அறிவிப்பை 'வெளியிட்ட' அரசு!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் சூழ்நிலையில், கர்நாடக அரசு 6-ம் வகுப்பு வரை தேர்வினை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 70-க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். மேலும் கர்நாடகாவை சேர்ந்த 76 வயது முதியவர் ஒருவர் சமீபத்தில் கொரோனாவுக்கு பலியாகி இருக்கிறார். இதுகுறித்து கர்நாடக அரசுத்தரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் நேற்று வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் 1-ம் வகுப்பு தொடங்கி 6-ம் வகுப்பு வரையில் மாணவர்களுக்கு தேர்வுகள் கிடையாது என கர்நாடக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மாநிலத்தின் கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், '' பெங்களூர் வடக்கு-தெற்கு, பெங்களூர் நகரம், பெங்களூர் புறநகர் ஆகிய கல்வி மாவட்டங்களில் 1 முதல் 6-ம் வகுப்பு வரையில் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்பு நடைபெற்ற பருவத்தேர்வுகளை அடிப்படையாக வைத்து அவர்களின் தேர்ச்சி முடிவு செய்யப்படும். இந்த முடிவு, பெங்களூரில் உள்ள 4 கல்வி மாவட்டங்களை தவிர கர்நாடகத்தின் பிற பகுதிகளுக்கு பொருந்தாது.
அதேபோல 7 முதல் 9-ம் வகுப்பு வரையில் உள்ள பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் விடுமுறை விடப்படுகிறது. தேர்வு நாளில் மட்டும் அவர்கள் பள்ளிக்கு வந்தால் போதும். வருகிற 23-ந் தேதிக்குள் அனைத்து தேர்வுகளையும் நடத்தி முடிக்க வேண்டும் என்று அரசு மற்றும் தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள கால அட்டவணைப்படி நடைபெறும். அதில் எந்த மாற்றமும் இல்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது,'' என்றார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கொரோனாவுக்கு 'பலியான' முதல் இந்தியர்... 'அதிகாரப்பூர்வமாக' அறிவித்தது அரசு... முழுவிவரம் உள்ளே!
- ‘வேலூரில் கணவரோடு ஒரே சண்டை’... ‘கதறிய தங்கைக்காக’... ‘பெங்களூரில் இருந்து வந்த என்ஜீனியர் அண்ணன்’... 'கடைசியில் நிலைகுலைந்துப்போன குடும்பம்'
- '6,000' கோழிகளை 'உயிருடன்' புதைத்த கொடுமை... 'மனித நேயமற்ற' செயலுக்கு வலுக்கும் 'கண்டனம்'... சமூக வலைதளத்தில் வெளியான 'வைரல் வீடியோ'...
- நாலு நாட்கள் 'பிணத்துடன்' சுற்றித்திரிந்த நபர்... கடைசியில் செய்த 'விபரீத' வேலை... பொறிவைத்து 'பிடித்த' போலீஸ்!
- ‘கல்யாணமாகி 6 மாசம் ஆச்சு’.. ‘இப்போ வந்து இப்டி சொல்றீங்க’.. கணவன் சொன்ன பதிலால் ‘ஷாக்’ ஆன மனைவி..!
- 'ஆம்னி' பஸ்ஸை விட காசு கம்மி தான்... 'ஒரேயடியாக' அதல பாதாளத்துக்கு போன 'பிளைட்' டிக்கெட்... எவ்ளோன்னு தெரிஞ்சா 'ஷாக்' கன்பார்ம்!
- எல்லா 'தியேட்டரையும்' இழுத்து மூடுங்க... 'அதிரடி' உத்தரவு பிறப்பித்த அரசு!
- ‘மெசேஜை’ பார்த்து ‘பதறிப்போய்’ புகார் கொடுத்த பெண்... ‘54 வழக்குகளில்’ தேடப்பட்ட கும்பல்... ‘ஆடம்பர’ வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு செய்துவந்த காரியம்...
- 'கொரோனா பயத்தால்' பள்ளிகளுக்கு கால வரையற்ற விடுமுறை... உச்சகட்டமாக ஆண்டுத்தேர்வை 'ரத்து' செய்து... கோடை 'விடுமுறை' அறிவித்த பள்ளி!
- ‘நேர்ல உங்கள பாக்கணும்’... ‘திருமணத்திற்கு’ முன் போன் செய்த ‘இளம்பெண்’... நம்பிச் சென்ற ‘மாப்பிள்ளைக்கு’ நேர்ந்த பரிதாபம்... வெளியான ‘அதிர்ச்சி’ காரணம்!...