'சொந்தக்காரங்க யாரும் தேவையில்லை...' 'இப்படி வாழுறது தான் எனக்கு நிம்மதி...' - தெருவில் வாழும் முன்னாள் காவல் அதிகாரி...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடக மாநிலத்தின் முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவர் தனக்கு பணம், சொந்த பந்தம் எதுவும் வேண்டாம் என பிச்சைக்காரர் போல சுற்றித்திரிந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டதை சேர்ந்தவர் மதுசூதனன். இவர் சிந்தாமணி டவுன் போலீஸ் நிலையத்தில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிவந்து கடந்த 2011-ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.
மதுசூதன்ராவ்க்கு ஒரு மகன் மற்றும் இரு மகள்கள் உள்ளனர். மூவரும் திருமணமாகி உள்ள நிலையில் மதுசூதன்ராவ், மனைவியுடன் தனது மகன் வீட்டில் வசித்து வந்தார். மேலும் அவருக்கு பணி ஓய்வூதியத் தொகையாக மாதந்தோறும் ரூ.9 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.
வாழ்க்கை நன்றாக சென்றுகொண்டிருந்த மதுசூதன்ராவ் ஓய்வுக்கு பின் வீட்டில் இருந்து மது போதைக்கு அடிமையாகியுள்ளார். மேலும் அவரின் மனைவியும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுசூதனின் மனைவி உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். மனைவி இறந்த துக்கத்தால் மேலும் மது பழக்கம் அதிகமாகியுள்ளது. அவரது மகன் இதனை கண்டித்தபோதும் மதுசூதன்ராவ் தொடர்ந்து குடித்து வந்துள்ளார். இதன்காரணமாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுசூதன் ராவை, அவரது மகன் வீட்டில் இருந்து வெளியே துரத்திவிட்டுள்ளார்.
மேலும் மதுக்கு அடிமையாகிய மதுசூதனராவ் மகள் வீட்டுக்கும் செல்ல முடியாமல் சாலையோரத்தில் படுத்து தூங்கி வந்துள்ளார்.அவரது வங்கிக்கணக்கில் லட்சக்கணக்கான ரூபாய் இருப்பு இருந்தும், தற்போது அவர் பழைய பொருட்களை வீதி, வீதியாக தேடிச் சென்று சேகரித்து அதை விற்று பிழைப்பு நடத்தி வருகிறார். மேலும் குப்பை கழிவுகளை சேகரிக்கும் சாக்கு மூட்டையுடன் கந்தலான சட்டை அணிந்து தாடியுடன் பிச்சைக்காரர் போல் வாழ்க்கை நடத்தி வருகிறார். இதை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
முன்னாள் காவல்துறை அதிகாரியின் இந்த நிலை அறிந்த சிக்பள்ளாப்பூர் போலீஸ் சூப்பிரண்டு ஜி.கே.மிதுன்குமாருக்கு தெரியவந்ததுள்ளது.அதையடுத்து மதுசூதன்ராவுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க சிந்தாமணி டவுன் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதனடிப்படையில் போலீசார், மதுசூதன் ராவை சந்தித்து தேவையான உதவிகளை செய்து தருவதாக கூறியுள்ளனர். ஆனால் எனக்கு எந்த உதவியும் வேண்டாம் என்று கூறிய மதுசூதன் ராவ், எனக்கு சொந்தம் என்று யாரும் வேண்டாம். எனக்கு இந்த தெரு வாழ்க்கையே போதும். இதுவே எனக்கு நிம்மதியாக இருக்கிறது. மனநிம்மதிக்காக தான் போலீஸ் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றேன். இந்த வாழ்க்கையே எனக்கு போதும் எனக் கூறி போலீசாரின் உதவியையும் தட்டிகழித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- மீண்டும் ஒரு சாத்தான்குளமா..? சிறை கைதி திடீர் மரணம்.. போராட்டத்தில் இறங்கிய உறவினர்கள்.. பரபரப்பு சம்பவம்..!
- 'எனக்கும் நடந்திருக்கு சார்'... 'அதிரவைத்த சென்னை கல்லூரி மாணவி'... 'நாகர்கோவில் காசி' வழக்கில் அதிரடி திருப்பம்!
- #Video: 'இப்படிதான் போராடுவாங்கள?'.. அமெரிக்க தேர்தல் சர்ச்சை போராட்டத்தில்.. இளம் பெண் செய்த ‘பரபரப்பு’ காரியம்! கொதித்தெழுந்த போலீஸ் சங்கங்கள்!.. ‘NYPD’ கடுமையான ட்வீட்! வீடியோ!
- கொந்தளித்த கோவா மக்கள்!.. 2 காவலர்கள் சஸ்பெண்ட்.. ‘பட்டப்பகலில்’ இளம் நடிகை செய்த ‘பரபரப்பு’ காரியத்தால் பாயும் வழக்கு!
- காதலி வீட்டில் ‘புதைக்கப்பட்ட’ நகைகள்.. காட்டிக்கொடுத்த ‘மீசை’.. தி.நகர் நகைக்கடை கொள்ளையில் வெளியான ‘பரபரப்பு’ தகவல்..!
- 'அந்த பையன் உனக்கு வேண்டாம்'... 'எச்சரித்த பெற்றோர்'... 'பெண்ணின் தந்தைக்கு வாட்சப்பில் வந்த மெசேஜ்'... அதிர்ச்சி சம்பவம்!
- எங்களை அவர் ‘ஏமாத்திட்டாரு’.. ‘பாபா கா தாபா’ கடையை வீடியோ எடுத்த ‘YouTuber’ மீது போலீஸில் பரபரப்பு புகார்..!
- 'அவளோட பேச்சுல மயங்கிட்டேன்'... 'தனியாக சந்திக்க அழைத்ததும் எதுவும் யோசிக்காமல் சென்ற இளைஞர்'... வாழ்க்கையில் மறக்க முடியாத அளவுக்கு நடந்த சம்பவம்!
- 'கொள்ளையன் முருகனை மறக்க முடியுமா'?... 'கோடி கணக்கில் பணம், நடிகையுடன் தொடர்பு'... வாழ்க்கையை புரட்டி போட்ட எய்ட்ஸ்!
- 'என் உடல் என் விருப்பம்'... 'திடீரென நிர்வாண போராட்டம் நடத்திய பெண்ணால் பரபரப்பு'... வெளியான பின்னணி!