'விடாத மழையில் இடிந்த சாலை'... 'ஆபத்தை உணராமல் சென்ற இளைஞர்கள்'... உதற வைக்கும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாவெள்ளத்தால் இடிந்திருந்த பாதையில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிஷா, குஜராத் மாநிலங்கள் மற்றும் தமிழ் நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்புகளால் இதுவரை பலர் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். கேரளாவில் மட்டும் இதுவரை 72 உயிரிழந்துள்ளனர். 58 பேரை காணவில்லை. வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பல பகுதிகளுக்கு சாலை வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் அங்கு பல பகுதிகள் வெள்ள காடாக மாறியுள்ளது. இந்நிலையில் பெல்காம் மாவட்டத்தில் வெள்ளத்தால் இழுத்து செல்லப்பட்ட பாதையின் நடுவில் மோட்டா சைக்கிளில் சென்ற இருவர் பாதை இடிந்து விழ வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டனர்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்த இந்த விபத்தில் ஒருவரது உடலை கண்டெடுத்துள்ளதாகவும், இன்னொருவரின் உடலை தேடி வருவதாகவும் உள்ளூர் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்த இந்த விபத்தில் ஒருவரது உடலை கண்டெடுத்துள்ளதாகவும், இன்னொருவரின் உடலை தேடி வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்