415 கிமீ பயணம் செஞ்சு.. 205 கிலோ வெங்காயம் விக்க போன விவசாயிகளுக்கு ஷாக் கொடுத்த ரசீது.. "வெறும் 8 ரூபா தானா?"

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சுமார் 205 கிலோ வெங்காயத்திற்கு விவசாயிகளுக்கு 8.36 ரூபாய் மட்டுமே கிடைத்தது தொடர்பான ரசீது தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வரும் நிலையில் பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | ஒரே ஒரு கொசுவால்.. கோமாவுக்கு போன இளைஞர்.. "கூடவே 30 ஆபரேஷனும்".. மனதை ரணமாக்கும் பயங்கரம்!!

வடக்கு கர்நாடகாவில் உள்ள கடாக் மாவட்டத்தில் தின்னாப்பூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள விவசாயிகள் சிலர், தாங்கள் சாகுபடி செய்த வெங்காயத்தை பெங்களூரில் உள்ள யஷ்வந்த்பூர் சந்தைக்கு எடுத்து செல்லவும் தீர்மானித்துள்ளனர்.

அதன் படி, சுமார் 205 கிலோ வெங்காயத்தை ஏற்றிக் கொண்டு, 415 கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டு சந்தையில் கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

மேலும் விவசாயிகளிடம் இருந்து வெங்காயத்தை வாங்கும் மொத்த விற்பனையாளர், குவிண்டால் ஒன்றுக்கு 200 ரூபாய் என விலை நிர்ணயம் செய்து, மொத்தமுள்ள 205 கிலோவிற்கும் 410 ரூபாய் எனவும் கணக்கு போட்டதாக சொல்லப்படுகிறது. இதன் பின்னர், அதில் இருந்து சரக்கு கட்டணத்திற்கு 377 ரூபாய் மற்றும் போர்ட்டர் கட்டணத்திற்கு 24 ரூபாய் கழித்து, மொத்தம் 8.36 ரூபாய் என பில் போட்டும் கொடுத்துள்ளனர்.

பயிரை பயிரிடவும், மாநில தலைநகருக்கு கொண்டு செல்லவும் சுமார் 25,000 ரூபாய் வரை செலவழித்த விவசாயிகள், தாங்கள் 400 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்து கொண்டு சேர்த்த 205 கிலோ வெங்காயத்திற்கு வெறும் 8.36 ரூபாய் மட்டும் கிடைத்தை கண்டதும் விரக்தி அடைந்துள்ளனர். அது மட்டுமில்லாமல், தங்களுக்கு கிடைத்த விலைக்கான ரசீதையும் இணையத்தில் சில விவசாயிகள் பகிர்ந்துள்ளனர். இந்த ரசீது அதிகம் வைரலாகி தொடங்கிய நிலையில், இதனைக் கண்ட பலரும் அதிர்ந்து போயுள்ளனர்.

தமிழ்நாடு, புனே உள்ளிட்ட இடங்களிலிருந்து கொண்டு வரப்படும் விளைச்சல் பொருட்களுக்கு யஷ்வந்த்பூர் மார்க்கெட்டில் நல்ல விலை கொடுக்கப்படும் நிலையில் உள்ளூர் விவசாயிகளுக்கு இந்த சொற்ப விலை கிடைக்கும் என எதிர்பார்த்து இருக்கவில்லை என்றும் விவசாயி ஒருவர் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் தொடர்மழை காரணமாக விவசாயிகள் கடுமையான நஷ்டத்தை சந்தித்துள்ள ஒரு சூழலில் இப்படி ஒரு விலை நிர்ணயம் செய்துள்ள விஷயம் பெரிய அளவில் பேசுபொருளாக மாறி உள்ளது. வெளியே இதைவிட அதிக விலை விற்கப்படும் நிலையில், அதனை விளைச்சல் செய்து விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு எட்டு ரூபாய் மட்டுமே கிடைத்துள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடைய செய்ததுடன் மட்டுமில்லாமல், இது தொடர்பான விவகாரமும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

Also Read | 39 ஆண்டுகளுக்கு முன்.. 4 மாத இடைவெளியில் கொலை செய்யப்பட்ட இரண்டு பெண்கள்.. இத்தனை நாள் கழிச்சு வழக்கில் நடந்த ட்விஸ்ட்!!

KARNATAKA, FORMERS, ONION, RECEIPT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்