லிவிங் டுகெதரில் இருந்த இளம்பெண் செஞ்ச விஷயம்.. ஆரம்பத்துல இருந்தே போலீசுக்கு இருந்த ஒரு டவுட்.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கர்நாடகாவையே நடுங்க வைத்த டாக்டர் விகாஸ் ராஜன் கொலை வழக்கில் பல திடுக்கிடும் திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

Advertising
>
Advertising

பெங்களூருவை சேர்ந்தவர் மருத்துவர் விகாஸ் ராஜன். இவர் உக்ரைனில் மருத்துவ படிப்பு முடித்துவிட்டு சென்னையில் பணிபுரிந்துவந்தார். இவர் இளம்பெண் ஒருவருடன் லிவிங் டுகெதரில் வசித்துவந்தார். கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி இவர் தனது துணையுடன் வெளியே சென்றபோது திடீரென மர்ம கும்பல் அவரை தாக்கியிருக்கிறது. இதனால் படுகாயமடைந்த விகாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக கோமாவுக்கு சென்ற விகாஸ், மூன்று நாள் கழித்து மரணமடைந்தார்.

லிவிங் டுகெதர்

இதனையடுத்து, காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அதில் விகாஸுடன் லிவிங் டுகெதரில் வாழ்ந்துவந்த பெண், தனது நண்பர்களுடன் இணைந்து விகாஸை தாக்கியது தெரியவந்தது. இதனையடுத்து, காவல்துறையினர் பெண் உட்பட மூன்று இளைஞர்களை கைது செய்து விசாரணை நடத்திவந்தனர். அதில், இளம்பெண் செய்த பிளான் குறித்து காவல்துறையினருக்கு தெரியவந்திருக்கிறது.

இதுகுறித்து பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர்,"விகாஸ் தனது அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டதால் ஆத்திரமடைந்து தனது நண்பர்களுடன் இணைந்து இந்த காரியத்தில் ஈடுபட்டதாக அந்த பெண் தெரிவித்திருக்கிறார். விகாஸ் போலி ஐடி உருவாக்கி இந்த புகைப்படத்தை வெளியிட்டதாக அவர் தனது நண்பர்களிடம் கூறியுள்ளார். இதனையடுத்து அவரது நண்பர்கள் விகாஸை தாக்கியிருக்கிறார்கள். ஆனால், தன்மீது சந்தேகம் வராமல் இருக்க சம்பவம் நடந்த அன்று விகாஸின் சகோதரருக்கு போன் செய்து விஷயத்தை தெரிவித்திருக்கிறார்" என்றார்.

விசாரணை

இந்நிலையில், கைதான இளைஞர் ஒருவரை அந்த பெண் காதலித்து வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுபற்றி பேசிய போலீஸ் அதிகாரி,"அந்த பெண், விகாஸை தாக்கிய இளைஞர்களுள் ஒருவரான சுஷீல் என்பவரை காதலித்து வந்தது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. துவக்கத்தில் பழிவாங்கும் முயற்சியாகவே இதனை நினைத்தோம். ஆனால், முழுவதும் அவர்களது திட்டப்படியே நடத்தப்பட்டிருக்கிறது. விஷயம் தெரிந்தபின்னர் இளைஞர்களுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என அந்த பெண் கூறினார். ஆனால் அதற்கடுத்து நடந்த கிடுக்கிப்பிடி விசாரணையில் உண்மையை அவர் ஒப்புக்கொண்டார்" என்றார்.

மேலும், இருவரது உறவு குறித்து விகாஸுக்கு தெரியவந்திருக்கிறது. அதனாலேயே அவரை கொலை செய்ய இளம்பெண் முடிவெடுத்ததும் விசாரணையில் தெரியவந்திருப்பதாக போலீசார் கூறியுள்ளனர்.

KARNATAKA, DOCTOR, POLICE, VIKAS RAJAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்