'6 மாசம் முன்னாடி நடந்த ஆப்பரேசன்ல மிஸ்டேக்...' '2 மாசமா ஒரே வயிற்றுவலி...' - ஸ்கேன் ரிப்போர்ட்ல தெரிய வந்த அதிர்ச்சிகர உண்மை...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கர்நாடக மாநிலத்தில் பிரசவித்த கர்ப்பிணியின் வயிற்றில் கவனக்குறைவாக துணியை வைத்து தைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், விஜயாப்புரா மாவட்டம் முத்தேபிகாலை சேர்ந்தவர் 28 வயதான ஷாகின் உத்னால். நிறைமாத கர்ப்பிணியான ஷாகின் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பிரசவத்திற்காக விஜயாப்புரா டவுனில் உள்ள மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டத்தில் அறுவை சிகிச்சை மூலம் ஒரு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. மேலும் ஒரு வாரம் சிகிச்சைக்கு பின்னர் தாயும், சேயும் நலமாக இருப்பதாக கூறி ஷாகினையும், அவரது குழந்தையையும் மருத்துவமனை நிர்வாகம் டிஸ்சார்ஜ் செய்து இருந்தனர்.

இந்நிலையில் ஷாகினுக்கு கடந்த 2 மாதங்களாக அடிக்கடி வயிற்று வலியால் ஏற்பட்டுள்ளது. பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்றும் வயிற்று வலி சரியாகவில்லை. இதன்காரணமாக கடைசியாக வயிற்றில் கட்டி ஏதேனும் உள்ளதா என பரிசோதனை செய்ய ஸ்கேன் எடுக்கும் போது அவர்களின் குடும்பத்திற்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் ஷாகினின் வயிற்றில் துணி இருப்பது கண்டறியப்பட்டது.

மேலும் ஷாகின் பிரசவத்தின் போது வெளியேறிய ரத்தத்தை துடைக்க டாக்டர்கள் துணியை பயன்படுத்தியதும், அந்த துணியை வயிற்றில் வைத்து டாக்டர்கள் தைத்து விட்டதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து பிரசவம் பார்த்த மருத்துவமனைக்கு சென்று முறையிட்ட போது கவனக்குறைவால் இதுபோன்று நடந்து விட்டதாக, ஷாகினிடம், டாக்டர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

தங்கள் மருத்துவமனையே அறுவை சிகிச்சை மூலம் துணியை அகற்றுவதாகவும் டாக்டர்கள் கூறினர். அதன்படி ஷாகினியின் வயிற்றில் வைத்து தைத்த துணியை தற்போது அறுவை சிகிச்சை மூலம் டாக்டர்கள் அகற்றியுள்ளனர். இருப்பினும் கவனக்குறைவாக செயல்பட்ட டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஷாகினின் உறவினர்கள், மருத்துவ அதிகாரிக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்