Toll Gate-ஐ வேகமாக நெருங்கிய ஆம்புலன்ஸ்.. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த பேரதிர்ச்சி.. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டத்தில், பைந்தூர் தாலுகாவில் ஷிரூர் என்னும் பகுதி அமைந்துள்ளது.

Advertising
>
Advertising

மேலும், இப்பகுதியில் சுங்கச் சாவடி ஒன்றும் உள்ளது. கடலோர பகுதியான ஷிரூரில் கடந்த சில தினங்களாக அதிக அளவில் மழை பதிவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அப்படி ஒரு சூழ்நிலையில், ஷிரூர் சுங்கச் சாவடி அருகே ஆம்புலன்ஸ் ஒன்று, விரைந்து வந்துள்ளது. ஏதோ அவசரமாக அந்த ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆம்புலன்ஸின் சைரன் சத்தம் கேட்டு, தூரத்திலேயே ஆம்புலன்ஸ் வருவதை அறிந்து கொண்ட சுங்கச் சாவடி ஊழியர்கள், வாகனம் செல்ல இருந்த பாதையில் வழி ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில், அங்கே இருந்த தடுப்புகளை வேகமாக அகற்றினர். முதலில் இருந்த இரண்டு தடுப்புகள் நீக்கப்பட்ட நிலையில், மூன்றாவது தடுப்பை ஊழியர் அகற்றிக் கொண்டிருந்த போது, யாரும் எதிர்பாராத வகையில் ஒரு அசம்பாவித சம்பவம் அங்கே அரங்கேறி இருந்தது.

சுங்கச் சாவடி அருகே ஆம்புலன்ஸ் வந்த போது, அதன் வேகம் காரணமாக திடீரென மழை நீரில், ஆம்புலன்ஸ் வாகனத்தின் டயர்கள் தளர்ந்துள்ளதாக தெரிகிறது. இதனால், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த வண்டி, வழுக்கிய படி சுங்கச் சாவடி ஒன்றில் இருந்த கேபின் மீது படு வேகமாக மோதியது.

இது தொடர்பான வீடியோ, அங்கிருந்த கேமரா ஒன்றில் பதிவாக, இணையத்திலும் வெளியாகி, கடும் பதற்றத்தை பார்ப்போர் மத்தியில் உருவாக்கி உள்ளது. இந்த விபத்தின் காரணமாக, ஆம்புலன்ஸில் இருந்த நோயாளி மற்றும் அட்டெண்டர் உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அதே போல, சுங்கச் சாவடி ஊழியர்கள் உள்ளிட்டோரும் விபத்தில் சிக்கி, தற்போது காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றது.

 

இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுங்கச் சாவடி அருகே வரும் போது கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ், ஒரு தனியார் மருத்துவமனையை சேர்ந்தது என தெரிய வந்துள்ளது. இது பற்றி அடுத்த கட்ட விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.

KARNATAKA, AMBULANCE, TOLL GATE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்