"உன் மகன் வீட்டுக்கு வரணும்னா ஒரு லட்சம் வேணும்".. பெற்றோருக்கு வந்த பகீர் போன்கால்.. விசாரணையில் வெளிவந்த தகவல்.. அவசரப்பட்டுட்டியே குமாரு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்திர பிரதேச மாநிலத்தில், தான் கடத்தப்பட்டுவிட்டதாக பெற்றோரிடம் பொய் கூறி பணம் பறிக்க முயன்ற மகனை காவல்துறையினர் கண்டுபிடித்திருப்பது அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிற்து.
Also Read | விபத்தில் சிக்கிய கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோவின் சூப்பர் கார்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
மகனை காணவில்லை
உத்திர பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியில் இருக்கிறது மங்கல்பூர் ஜைதிபூர் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த சிவசங்கர் என்பவர் அருகில் இருக்கும் கல்லூரியில் முதலாம் ஆண்டு பிஎஸ்சி படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று வெளியே சென்ற சிவசங்கர் வெகுநேரமாகியும் வீட்டிற்கு வராததால் கவலையடைந்த அவரது பெற்றோர் என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பமடைதிருந்திருக்கின்றனர். இந்நிலையில், கொஞ்ச நேரத்தில் சிவசங்கர் தனது பெற்றோருக்கு போன் செய்திருக்கிறார். அப்போது, தான் கடத்தப்பட்டதாகவும் 1 லட்சம் ரூபாய் கொடுக்கவில்லை என்றால் தன்னை கொன்றுவிடுவேன் என சிலர் மிரட்டுவதாகவும் கூறியுள்ளார்.
அதிர்ச்சி
இதனால் அதிர்ச்சியடைந்த சிவசங்கரின் பெற்றோர், காவல்துறைக்கு செல்ல முடிவெடுத்திருக்கின்றனர். ஆனால், தங்களது மகனுக்கு ஏதும் நேர்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் போலீசுக்கு செல்ல தயங்கியுள்ளனர். இதனிடையே மீண்டும் தனது பெற்றோருக்கு போன் செய்த சிவசங்கர் 12,000 ரூபாய் தரும்படியும் மீதி பணத்தை தான் கொடுத்துவிடுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இதனால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்திருக்கின்றனர். தனது மகன் ரூரா பகுதியில் இருக்கலாம் எனவும் சிவசங்கரன் தந்தை காவல்துறையினரிடத்தில் தெரிவித்திருக்கிறார். இதனைடுத்து உடனடியாக காவல்துறை அதிகாரிகள் விசாரணையில் இறங்கினர்.
வெளிச்சத்துக்கு வந்த உண்மை
இந்நிலையில், அந்த கிராமம் முழுவதும் விசாரணையில் ஈடுபட்ட காவல்துறையினர் இறுதியாக சிவசங்கரை கண்டுபிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. கல்லூரிக்கு பணம் கட்டுவதற்காக வீட்டில் இருந்து பெற்ற 30,000 ரூபாய் தொகையை ஆன்லைனில் விளையாடி தோற்றுவிட்டதாகவும் அதனால் வீட்டில் இருந்து பணம் பெறவே இப்படி ஒரு திட்டத்தை தீட்டியதாகவும் தெரிவித்திருக்கிறார் சிவசங்கர்.
உத்திர பிரதேசத்தில் தன்னை கடத்திவிட்டதாக பெற்றோரிடம் இருந்து பணம் பெற முயற்சித்த இளைஞர் காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்டது அம்மாநிலம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கல்யாணமான கொஞ்ச நாள்-லேயே வயிறு வலின்னு கதறிய மனைவி.. டாக்டர் ரிப்போர்ட்டை பார்த்துட்டு போலீசுக்கு போன புது மாப்பிள்ளை..!
- "ஏழேழு ஜென்மத்துக்கும் நீதான் என்னோட மனைவி".. சத்தியம் செய்த மாப்பிள்ளை.. நம்பி சென்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
- பசியுடன் சுற்றித்திரிந்த குரங்கு.. போலீஸ் அதிகாரி காட்டிய பாசம்.. நெகிழ வைக்கும் வீடியோ..!
- ‘7 முறை உயிர் தப்பிய இளைஞர்’.. ‘நீயா’ படம் மாதிரி துரத்தி, துரத்தி பழி வாங்கும் பாம்பு?!.. அதிர வைக்கும் பின்னணி..!
- டியூசன் போய்ட்டு வீட்டுக்கு வந்த மகன்.. ரொம்ப நேரம் தட்டியும் கதவை யாரும் திறக்கல.. உடைத்துச் சென்ற உறவினர்களுக்கு காத்திருந்த ஷாக்..!
- "ஓடிப்போய் திருமணம்.. இப்ப 1 வயது குழந்தை".. போக்சோவில் கணவரை கைது செய்யணுமா? நீதிமன்றம் பரபரப்பு பதில்!
- "தங்கமான' மனுஷங்கயா தாலிபான்கள்...!" - சர்ச்சை பேச்சால் தனக்கு தானே 'ஆப்பு' வைத்துக்கொண்ட பிரபல கவிஞர்...!
- 'இந்த பார்சல் மேல தான் டவுட்டா இருக்கு...' 'ஸ்கேன் பண்ணி பார்த்தபோவே ஓரளவு உள்ள என்ன இருக்குன்னு தெரிஞ்சிடுச்சு...' - பிரித்து பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி...!
- ஒரு 'மாம்பழத்தை' பறிச்சு 'சாப்பிட்டா' ஒரு டேஸ்ட்...! 'இன்னொண்ண சாப்பிட்டு பார்த்தா அது வேற டேஸ்ட்...' ஒரே மரத்துல இத்தனை வகையா...? - அதிசய மாமரம்...!
- 'குழந்தையுடன் ரயிலேறிய கடத்தல்காரன்!'.. '260 கி.மீ தொலைவுக்கு.. இடையில் எங்கயும் நிறுத்தாதீங்க!' .. 'திரைப்பட பாணியில்' குழந்தையை மீட்ட ஆர்பிஎஃப் அதிகாரிகள்!