"'பொண்டாட்டி' கூட 'சண்ட' போட்டுட்டு போனது ஒரு 'குத்தமா'"??... திரும்பி வீட்டுக்கு வந்தவருக்கு காத்திருந்த 'ட்விஸ்ட்'... அப்போ அவரு 'யாரு'ங்க???
முகப்பு > செய்திகள் > இந்தியாகான்பூர் பகுதியை அடுத்த சாகேரி என்னும் பகுதியை சேர்ந்தவர் அகமது ஹாசன்.
இவர் கடந்த சில தினங்களுக்கு முன் தனது மனைவியுடன் சண்டை போட்டு விட்டு வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். இரண்டு, மூன்று நாட்களாக அகமது ஹாசன் வீட்டிற்கு திரும்பி வராத நிலையில், போலீசாரிடம் ஹாசனின் குடும்பத்தினர் புகாரளித்துள்ளனர்.
இதனையடுத்து, ஹாசன் என அவரது உறவினரால் அடையாளம் காணப்பட்ட உடல் ஒன்றையும் கடந்த ஐந்தாம் தேதியன்று ஹாசனின் குடும்பத்தினர் அடக்கம் செய்தனர். அனைவரும் ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியாக உடலை அடக்கம் செய்த இரண்டாவது நாளில் அகமது ஹாசன் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அவரைக் கண்ட குடும்பத்தினர், இன்ப அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
இது தொடர்பாக அகமது ஹாசன் கூறுகையில், 'சில நாட்களுக்கு முன் எனது மனைவியுடன் சண்டை போட்டுக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினேன்.அப்படி வெளியேறிய போது, ஒருவர் எனக்கு உதவி செய்து வேலையும் கொடுத்தார். அதை செய்து முடித்து விட்டு அதற்கான பணத்தை பெற்றுக் கொண்டு வீட்டிற்கு திரும்பினேன். அப்போது எனது வீடு பூட்டப்பட்டிருந்தது. அக்கம் பக்கத்தினர் என்னை அடையாளம் கண்டு என்னை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். அப்போது தான், நான் இறந்ததாக ஒருவரின் உடலை அடக்கம் செய்த தகவலை அறிந்து கொண்டேன். ஆனால் நான் தற்போது உயிரோடு இருக்கிறேன்' என தெரிவித்துள்ளார்.
அகமது ஹாசனின் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் திளைத்து போயுள்ள அதே வேளையில், ஹாசன் இறந்ததாக அவரின் குடும்பத்தினர் அடக்கம் செய்த நபரின் உடல் யார் என்பது குறித்து போலீசாருக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அதே வேளை ஹாசனின் உடலை தவறாக அடையாளம் கண்டதற்கான விளைவுகளை ஹாசன் குடும்பத்தினர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘சினிமா க்ளைமேக்ஸை’ மிஞ்சும் ‘திக்..திக் நிமிடங்கள்!’.. விகாஸ் துபே ‘என்கவுண்டர்!’ நடந்தது எப்படி?.. சர்ச்சையைக் கிளப்பும் கேள்விகள்!
- 'எட்டு போலீஸ்காரர்களை 'என்கவுண்டர்' செய்த ரவுடி கும்பல்!' - போலீஸ் 'வராங்கண்ணு' தகவல் சொன்னதே இன்னொரு 'போலீஸ்' தானா?? - பகீர் கிளப்பும் 'பின்னணி'!
- “8 போலீஸாரை சுட்டுக்கொன்ற உ.பி. டான்”.. “19 வருஷத்துக்கு முன்னாடி செஞ்சது என்ன தெரியுமா?”.. சினிமாவை மிஞ்சும் மிரட்டல் சம்பவம்!
- 'டிஎஸ்பிக்கு வந்த போன் கால்'... 'நம்பி போன அதிகாரிகள்'... 'தெறித்த துப்பாக்கி ரவை'... 'அதிகாலையில் நடந்த பயங்கரம்!
- ‘விடுப்பு வேண்டி மாணவன் கூறிய அதிர்ச்சிக் காரணம்’.. அனுமதி அளித்த முதல்வரால்.. ‘வைரலாகும் லெட்டர்’..
- ‘டிக்டோக்’ மோகத்தால்.. ‘ரயில் எஞ்சின் மேல் ஏறிய..’ சிறுவனுக்கு நடந்த பரிதாபம்..