‘பெண் மருத்துவர் கொலையில்’... ‘குற்றஞ்சாட்டப்பட்ட 4 பேர் என்கவுண்ட்டர்’... 'பெண் அரசியல் தலைவர்கள் கருத்து’!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் என்கவுண்டர் செய்யப்பட்டது குறித்து தமிழக அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் 4 பேரும் என் கவுண்டர் செய்யப்பட்டனர். இதுகுறித்து, கருத்து தெரிவித்துள்ள தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ‘என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றதை நல்ல செயலாக பார்க்கிறேன். பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் கொடுத்தால் தான், வருங்காலங்களில் பெண்கள் பாதுகாப்பாக எங்கும் செல்ல முடியும்’ என கூறியுள்ளார்.

அதேபோல், திமுக.வின் மக்களவை உறுப்பினர் கனிமொழி, ‘4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதால் பலருக்கு மகிழ்ச்சி தரும்வேளையில், நியாயம் கிடைக்கும் உணர்வை தருகிறது. அதேவேளையில் என்கவுண்ட்டர் தான் இதற்கு தீர்வா எனவும் கேள்வி எழுகிறது’ என்று தெரிவித்துள்ளார்.

சி.பி.எம் கட்சியின் பாலபாரதி, ‘என்கவுண்டர் தற்காலிக தீர்வு தான், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு  மத்திய, மாநில அரசுகள் முழுமையான தீர்வு காண வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதேபோல், ‘தெலுங்கானாவில் பெண் மருத்துவர் விவகாரத்தில் நீதித்துறை மூலம் அரசு நடவடிக்கை எடுத்திருக்கலாம்’ என பாஜகவைச் சேர்ந்த வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

RAPE, MURDER, CASE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்