"அட, கமலோட விக்ரம் படத்துக்கும், அர்ஜென்டினா Cup ஜெயிச்சதுக்கும் இப்டி ஒரு ஒற்றுமை இருக்கா?".. ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ள விளையாட்டு கால்பந்து. இதன் உலக கோப்பை தொடர், கடந்த நவம்பர் மாதம் கத்தாரில் வைத்து ஆரம்பமாகி இருந்தது. அந்த நாள் முதல், இறுதி போட்டி நடந்து முடிந்த தினம் வரை உலக அளவில் கால்பந்து ரசிகர்கள் பரபரப்பாக தான் இருந்தனர்.

"அட, கமலோட விக்ரம் படத்துக்கும், அர்ஜென்டினா Cup ஜெயிச்சதுக்கும் இப்டி ஒரு ஒற்றுமை இருக்கா?".. ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்!!
Advertising
>
Advertising

Also Read | "மொத்த உலகமும் தேடுன விஷயம்".. திகைச்சு நின்ன Google.. 25 ஆண்டுகளில் இல்லாத டிராபிக் - சுந்தர் பிச்சை!!

அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் ஆகிய அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்தன. ரசிகர்கள் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இறுதி போட்டியின் ஒவ்வொரு நிமிடமும் அனல் பறக்கும் வகையில் தான் அமைந்திருந்தது. இரு அணிகளும் 3 - 3 என்ற கோல் கணக்கில் இருந்ததால், பெனால்டி ஷூட்அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில், அர்ஜென்டினா அணி 4 - 2 என்ற கணக்கில் வெற்றி பெற்று கால்பந்து உலக கோப்பையை 3 ஆவது முறையாக கைப்பற்றி உள்ளது.மெஸ்ஸி மற்றும் அர்ஜென்டினா அணிக்கு உலக அளவில் உள்ள ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

KamalHaasan vikram movie released 1986 and 2022 argentina won fifa wc

இந்த நிலையில், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படங்களுக்கும், கால்பந்து உலக கோப்பை தொடரில் அர்ஜென்டினா அணி கோப்பையை வென்றதற்கும் உள்ள கனெக்ஷன் தொடர்பான செய்தி, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி வெளியாகி இருந்த திரைப்படம் 'விக்ரம்'. இந்த ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் அதிக வசூல் செய்த திரைப்படங்களில் ஒன்றாகவும் விக்ரம் திரைப்படம் மாறி இருந்தது. விக்ரம் திரைப்படத்தை போல, ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் நடிப்பில் உருவாகி இருந்த "Top Gun: Maverick" திரைப்படமும் இந்த ஆண்டு மே 27 ஆம் தேதி வெளியாகி இருந்தது. இப்படி கமல்ஹாசன் மற்றும் டாம் குரூஸ் ஆகிய நடிகர்களின் திரைப்படங்கள் வெளியான ஆண்டு அர்ஜென்டினா கால்பந்து அணி, உலக கோப்பையை கைப்பற்றியுள்ளது.

இதே போல, கடந்த 1986 ஆம் ஆண்டு, கமல்ஹாசன் நடிப்பில் 'விக்ரம்' என்ற திரைப்படம், ராஜசேகர் இயக்கத்தில் வெளியாகி இருந்தது. இதே ஆண்டில், டாம் குரூஸ் நடிப்பில் 'Top Gun' திரைப்படமும் வெளியானது. இந்த ஆண்டில் தான் அர்ஜென்டினா அணி கால்பந்து தொடரில் இரண்டாவது முறையாக உலக கோப்பையை கைப்பற்றி இருந்தது.

1986 ஆம் ஆண்டு கால்பந்து உலக கோப்பையை கைப்பற்றிய அர்ஜென்டினா அணி, 36 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது உலக கோப்பையை கைப்பற்றி உள்ளது. மேலும், இந்த 2022 ஆம் ஆண்டிலும் கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் திரைப்படமும், டாம் க்ரூஸ் நடிப்பில், Top Gun Maverick திரைப்படமும் வெளியாகி உள்ளது.

இப்படி விக்ரம், Top Gun திரைப்படங்கள் மற்றும் அர்ஜென்டினா அணி கால்பந்து உலக கோப்பையை கைப்பற்றி உள்ளதில் உள்ள ஒற்றுமையை ஒப்பிட்டு ரசிகர்கள் தெரிவித்து வரும் கருத்து, அதிகம் வைரலாகி வருகிறது.

Also Read | "அர்ஜென்டினா ஜெயிச்சது, எம்பாப்பே ஹாட்ரிக் கோல் அடிச்சது இருக்கட்டும்".. கால்பந்து உலக கோப்பைல இங்கிலாந்து டீம் ஹிஸ்டரி தெரியுமா?

KAMAL HAASAN, VIKRAM MOVIE, ARGENTINA, FIFA WORLD CUP

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்