காரில் இருந்த வேறொரு பெண்.. கேள்வி கேட்ட மனைவி.. படத் தயாரிப்பாளர் செய்த பதறவைக்கும் காரியம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாதனது கணவர் தன்மீது வாகனத்தை மோதியதாக திரைப்பட தயாரிப்பாளரின் மனைவி காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
![காரில் இருந்த வேறொரு பெண்.. கேள்வி கேட்ட மனைவி.. படத் தயாரிப்பாளர் செய்த பதறவைக்கும் காரியம்..! காரில் இருந்த வேறொரு பெண்.. கேள்வி கேட்ட மனைவி.. படத் தயாரிப்பாளர் செய்த பதறவைக்கும் காரியம்..!](https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/kamal-mishra-rams-wife-with-car-cops-starts-investigation-thum.jpg)
தனது கணவரும் திரைப்படத் தயாரிப்பாளருமான கமல் கிஷோர் மிஸ்ராவை வாகனத்தில் மற்றொரு பெண்ணுடன் பார்த்ததாகவும், அப்போது தன்மீது அவர் காரை ஏற்றியதாகவும் கமல் கிஷோர் மிஸ்ராவின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். புறநகர் அந்தேரியில் (மேற்கு) குடியிருப்பு கட்டிடத்தின் பார்க்கிங் பகுதியில் அக்டோபர் 19 அன்று நடந்த இந்த சம்பவத்தில் கமல் மிஸ்ராவின் மனைவி காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கமல் மிஸ்ராவின் மனைவி தனது கணவரைத் தேடி வெளியே வந்தபோது, பார்க்கிங் பகுதியில் அவரது காரில் மற்றொரு பெண்ணுடன் அவர் இருப்பதை மனைவி கண்டதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. கமல் மிஸ்ராவின் மனைவி அவரை எதிர்கொள்ளச் சென்றபோது, கமல் மிஸ்ரா அந்த இடத்திலிருந்து தப்பிக்க காரை ஓட்டிச் சென்றதாகவும், அப்போது அவர்மீது கார் மோதியதாகவும் தெரிகிறது. இதனால் அந்த பெண்மணியின் கால்கள், கைகள் மற்றும் தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அவரது மனைவி அளித்த புகாரின் அடிப்படையில், அம்போலி காவல்நிலையத்தில் கமல் மிஸ்ராவுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) 279 (ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவது) மற்றும் 337 (மற்றவர்களின் உயிருக்கோ தனிப்பட்ட பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிப்பது) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கமல் மிஸ்ரா இந்த ஆண்டு வெளியான தேஹாட்டி டிஸ்கோ எனும் படத்தை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அவர்மீது அவரது மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திவருவதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- மனைவியை உயிருடன் புதைத்த நபர்.. ஸ்மார்ட் வாட்ச்சில் இருந்து வந்த அவசர அழைப்பு.. அடுத்தடுத்து பரபரப்பு!!
- "சிக்கன் சமைக்க மாட்டியா நீ".. கணவன் மனைவி இடையே வந்த தகராறு.. விலக்கிவிட போன பக்கத்து வீட்டுக்காரருக்கு ஏற்பட்ட சோகம்..
- "அய்யா, என் புருஷன கடத்திட்டாங்க".. புகார் கொடுத்த 2 வது மனைவி.. விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி!!.. கணவன் பிளான் எல்லாம் வேஸ்ட்!!
- 'மர்ம' சூட்கேஸ்.. உள்ளே இருந்த பெண்ணின் சடலம்.. திணறிய போலீஸ்க்கு உதவிய ஆட்டோ டிரைவரின் வாக்குமூலம்..!
- கேதர்நாத் விமான விபத்தில் பலியான பைலட்.. விபத்துக்கு முன் கடைசியாக மனைவிக்கு போன் செஞ்சு சொன்ன உருக்கமான விஷயம்..
- புதுசா வாங்குன பைக்-கு மாலையை போடுங்க.. டக்குன்னு கணவர் செஞ்ச காரியம்.. எல்லோரும் சிரிச்சிட்டாங்க.. Cute வீடியோ..!
- பி. காம் படிப்பு.. முன்னணி நிறுவனத்தில் வேலை.. எல்லாத்தையும் விட்டுட்டு இளைஞர் எடுத்த ரூட்.. அவங்க மனைவி குடுத்த ஐடியா தான் காரணமாம்!
- வேறு ஒரு ஆணுடன் இன்ஸ்டாவில் ரீல்ஸ் செய்த மனைவி.. நடுராத்திரி கேட்ட அலறல் சத்தம்.. சென்னையில் பரபரப்பு..!
- டக்குனு காரை நிறுத்தி கீழே இறங்கிய பிரதமர் மோடி.. முதியவர் கொடுத்த அன்பு பரிசு.. வைரலாகும் வீடியோ..!
- "150 ரூபா செலவு'ல 300 KM வரை போகலாம்".. விவசாயி மகன் உருவாக்கிய அற்புதமான கார்!!.. "வேற லெவல்'ங்க இது"