'இஞ்சி, எலுமிச்சை எல்லாம் கலந்து... தயாரிக்கப்பட்ட அறிய வகை கொரோனா தடுப்பு ஜூஸ்!'... விஞ்ஞானிகளுக்கு டஃப் கொடுத்த ஜூஸ் கடைக்காரர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா தடுப்பு ஜூஸ் என்ற பெயரில் பொது மக்களை ஏமாற்றிய வாலிபர் ஒருவர் போலீசில் சிக்கி உள்ளார்.

கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதால், அம்மாநில அரசு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றி வதந்தி பரப்பினாலோ, தவறான தகவல்களை பதிவு செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருவனந்தபுரம் அருகே உள்ள வர்கலையில் கொரோனா தடுப்பு ஜூஸ் என்ற பெயரில் பொது மக்களை ஏமாற்றிய வெளி மாநில வாலிபர் ஒருவர் போலீசில் பிடிபட்டுள்ளார்.

அவர் அப்பகுதியில் ஏற்கனவே ஜூஸ் கடை நடத்திவந்துள்ளார். தற்போது கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அதை பயன்படுத்தி பணம் சம்பாதிக்க அவர் துணிந்துள்ளார்.  இதன் விளைவாக, தனது ஜூஸ் கடை முன்பு, கொரோனா வைரஸ் தடுப்பு ஜூஸ் ரூ.150 என்று எழுதி விளம்பரப்படுத்தியுள்ளார். இதனால், அங்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. போட்டி போட்டுக்கொண்டு அந்த ஜூசை வாங்கிக் குடித்துவிட்டுச் சென்றனர்.

இதைப்பார்த்த சிலர், இதுகுறித்து சுகாதாரத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து, போலீஸாரும் அதிகாரிகளும் அந்த கடைக்கு சென்று விசாரணை நடத்தினர்.

அந்த கடைக்காரரை பிடித்து அவர்கள் விசாரித்த போது இஞ்சி, எலுமிச்சை, நெல்லிக்காய் ஆகியவற்றை கலந்து ஜூஸ் தயார் செய்து அதை கொரோனா வைரஸ் தடுப்பு ஜூஸ் என்ற பெயரில் அவர் விற்றது தெரியவந்தது. பொதுமக்களை ஏமாற்றியதற்காக அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர், அவரை கண்டித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

POLICE, KERALA, CORONAVIRUS, JUICE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்