நிர்பயா வழக்கு: குற்றவாளிகளுக்கு 'தூக்குத்தண்டனை' விதித்த நீதிபதி... 'அதிரடி' இடமாற்றம்... என்ன நடந்தது?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவை பிறப்பித்த டெல்லி கீழமை நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் அரோரா உச்ச நீதிமன்றத்தின் கூடுதல் பதிவாளராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

தலைநகர் டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் வழக்கில் முகேஷ் குமார் சிங் (32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்‌ஷய் குமார் சிங் (31) ஆகிய 4 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

குற்றவாளிகள் 4 பேரையும் பிப்ரவரி 1-ம் தேதி காலை 6 மணிக்கு திகார் சிறையில் தூக்கில் போட வேண்டும் என விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதி சதீஷ்குமார் அரோராவின் இந்த தீர்ப்பை அடுத்து, 4 பேரையும் தூக்கில் போடுவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில்,  டெல்லி கீழமை நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் அரோரா உச்ச நீதிமன்றத்தின் கூடுதல் பதிவாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார் என டெல்லி நீதிமன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார்.

SUPREME COURT, NIRBHAYA CASE, SATISH KUMAR ARORA, TRANSFER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்