'காணொலிக் காட்சி மூலம்கட்டிலில் படுத்தபடி' வாதாடிய 'வக்கீல்...' 'கடுப்பான நீதிபதி!...' 'வழக்கறிஞருக்கு வார்னிங்...'
முகப்பு > செய்திகள் > இந்தியாவழக்கு விசாரணையின்போது டி -சர்ட் அணிந்து கொண்டு கட்டிலில் படுத்தபடி வழக்கறிஞர் வாதாடியதை கண்ட உச்ச நீதிமன்ற நீதிபதி எரிச்சலடைந்தார். நீதிமன்றத்தை காணொலிக்காட்சி மூலமாக அணுகினாலும் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று காட்டத்துடன் தெரிவித்தார். இதையடுத்து தனது செயலுக்கு வழக்கறிஞர் மன்னிப்புக் கேட்டு கொண்டார்.
கொரோனா அச்சத்தின் காரணமாக, நாடு முழுவதும் நீதிமன்றங்களில் தற்போது காணொலிகாட்சி மூலம் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விசாரணைக்கு ஆஜராகும் வழக்கறிஞர்கள் அணிய வேண்டிய உடைகள் குறித்து, உச்ச நீதிமன்ற நிர்வாகம் அண்மையில் வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு ஒன்று நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், டீ சர்ட் அணிந்தபடி, கட்டிலில் படுத்துக் கொண்டு வாதாடினார்.
இதனை கவனித்த நீதிபதி, காணொலிகாட்சி வாயிலாக வழக்கு விசாரணைக்கு ஆஜராகும் வழக்கறிஞர்களுக்கு வழிகாட்டுதல் நெறிமுறைகள் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன. அவற்றை வழக்கறிஞர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும். வழக்கறிஞர்கள் வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்போது குறைந்தபட்ச ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்று நீதிபதி காட்டமாக தெரிவித்தார்.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் தனது செயலுக்காக நீதிபதியிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'சீனாவை' எளிதில் 'விட்டு விட' மாட்டோம்... 'அடுத்தடுத்து' தொடர்ந்து 'பதிலடி' இருக்கும்... 'டிரம்ப் பாய்ச்சல்...'
- 'கொரோனா' ஒன்றும் 'பெருந்தொற்று' இல்லை... சொன்னது 'உச்சநீதிமன்ற' நீதிபதி... 'நம்ம நாடு இல்லை...'
- 'வக்கீல்களின் கருப்பு கோட்டிற்கு கொரோனாவால் வந்த ஆபத்து'... சுப்ரீம் கோர்ட் முக்கிய அறிவிப்பு!
- 'திருடனுக்கு கொரோனா தொற்று...' தனிமைப்படுத்தப்பட்ட 'நீதிபதி, 17 போலீசார்'... 'தலைகீழாக' மாறிய 'நிலைமை...'
- "உனக்கு கொரோனா வர..." நீதிபதியை பார்த்து சாபமிட்ட வழக்கறிஞர்... அதிர்ந்து போன நீதிபதியின் அதிரடி உத்தரவு...
- 'டாக்டர் மாப்பிள்ளைதான்' வேணும்னு 'சொன்னவங்க' எல்லாம்... இப்போ 'வீட்டை' காலி பண்ண 'சொல்றாங்க'... 'இது ரொம்ப தவறுங்க'... 'கண்டித்த மத்திய அமைச்சர்'...
- '4 குற்றவாளிகளும்' 'தூக்கில்' போடப்பட்டனர்... 'கடைசிகட்ட' மனுக்கள் அடுத்தடுத்து 'நிராகரிப்பு'... '7 ஆண்டுகளுக்குப் பிறகு நிர்பயாவுக்கு' 'நீதி' கிடைத்ததாக தாயார் உருக்கம்...
- நிர்பயா வழக்கு: குற்றவாளிகளுக்கு 'தூக்குத்தண்டனை' விதித்த நீதிபதி... 'அதிரடி' இடமாற்றம்... என்ன நடந்தது?
- அங்க அடயாளங்கள் - 'ஒரு தும்பிக்கை, 4 கால், ஒரு வால்'... "யானையை கண்டுபுடிச்சுத் தாங்க ஐயா"... விக்கித்து போன 'நீதிபதி'...
- 'ஐயா அப்போ எனக்கு 19 வயசு தான்'... 'நிர்பயா வழக்கில் புது ட்விஸ்ட்'... என்னவாகும் தூக்குத்தண்டனை?