Job Alert : 12ம் வகுப்பு படித்தவர்களுக்கு CISF ல் வேலை - சூப்பர் சம்பளம்.. விண்ணப்பிப்பது எப்படி?
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்திய தொழிற்பாதுகாப்பு படையில் (CISF) காலியாக உள்ள 249 தலைமை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள இளைஞர்கள் வருகின்ற மார்ச் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய தொழிற்பாதுகாப்பு படை
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் CISF எனப்படும் மத்திய தொழிற்பாதுகாப்பு படை என்பது இந்தியாவின் அணு உலைகள், விண்வெளி ஆய்வகங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், பாதுகாப்பு தேவைப்படும் அரசு கட்டிடங்கள், புராதானச் சின்னங்கள் போன்ற முக்கிய தொழிற்நிலையங்களைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட துணை ராணுவப்படை ஆகும்.
வேலைவாய்ப்பு
தற்போது CISF-ல் காலியாக உள்ள 249 தலைமை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்பதைக் கீழே காணலாம்.
கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சிப்பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: விண்ணப்பிக்கும் நபர்கள் 18 வயது முதல் 23 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
மேற்கண்ட தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் https://www.cisf.gov.in/cisfeng/recruitment/ என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று தலைமை காவலர் பணிக்கான விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்து அதனைப் பூர்த்தி செய்து வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கட்டணம்: தகுதியுடையோர் ரூ.100 செலுத்தி இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும். பெண்கள் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் முறை:
மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் உடற்தகுதி தேர்வு (Physical standard test), சான்றிதழ்கள் / ட்ரையல் டெஸ்ட் (Documentation/ Trial Test) மற்றும் திறன் தேர்வு (Proficiency Test) ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
ஊதியம்:
தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.25,000 முதல் ரூ. 81,000 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- SSC அறிவிப்பு: +2 படிச்சிருந்தா போதும் 80,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!
- தமிழ்நாடு வருமான வரித்துறையில் அசத்தலான வேலைவாய்ப்பு: விண்ணப்பிப்பது எப்படி?
- "உங்க வாழ்க்கையே மாறப் போகுது.." நம்பி ஏமாந்த 150 பேர்.. "ஆட்டைய போட்டது மட்டும் இத்தன கோடியா??.." பகீர் 'ரிப்போர்ட்'...
- குவைத் நாட்டில் ஏராளமான பெண்களுக்கு வேலைவாய்ப்பு.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
- ஜி... ஒரு நிமிஷம் நில்லுங்க...! அவங்க 'யாரா' வேணா இருக்கட்டும்...! 'இது என்னோட கடமை...' - CISF எடுத்த 'மாஸ்' முடிவு...!
- ஏங்க 'வாக்சின்' போட மாட்டேன்னு இப்படி 'அடம்' பிடிக்குறீங்க...? 'ஒத்தக்கால்ல நின்ன மனுஷன்...' 'ஆப்பு வைத்த நிறுவனம்...' - இப்போ போச்சா எல்லாம்...?!
- ஐடி இண்டஸ்ட்ரில '30 லட்சம்' பேர 'வேலைய' விட்டு தூக்க போறாங்களா...? 'வெளியான பரபரப்பு தகவல்...' - விளக்கம் அளித்த நாஸ்காம்...!
- கடந்த 'ஒரே மாசத்துல' மட்டும் 'இவ்வளவு' பேருக்கு வேலை போயிடுச்சா...! 'வேலை தேடுறவங்க எண்ணிக்கையும் அதிகரிப்பு...' - அதிர வைக்கும் 'சர்வே' முடிவுகள்...!
- வேலைய விட்டு தூக்கிட்டாங்க ஐயா...! 'tag பண்ணின பத்தே நிமிஷத்துல...' - அமைச்சரிடம் இருந்து வந்த பதில்...!
- 'வேலை இழப்பு ஒருபக்கம் இருந்தாலும்...' 'இந்த விஷயம்' இன்னும் ரொம்ப ஆபத்து...! - அதிர வைக்கும் சர்வே முடிவுகள்...!