'இலவசமா 'ஹெச்.டி டிவி'...'அதிரடியை ஆரம்பிச்ச 'ஜியோ'... 'செம குஷியில் வாடிக்கையாளர்கள்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ரிலையன்ஸ் நிறுவனத்தின் 42-வது ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தியாவின்  முன்னணி நிறுவனமான ரிலையன்ஸின் 42-வது ஆண்டுப் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் ஜியோவின் ஜிகா ஃபைபர் திட்டம் குறித்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து பேசிய அம்பானி ''வரும் செப்டம்பர் 05, 2019 அன்று முதல் ரிலையன்ஸ் ஜியோவின் ஜிகா ஃபைபர் திட்டம் செயல்பாட்டுக்கு வர உள்ளதாக கூறியுள்ளார். மேலும் ஜியோ ஜிகா ஃபைபர் திட்டத்தின் படி இணைய வேகம் சுமார் 100 எம்பிபிஎஸ் தொடங்கி 1 ஜிபிபிஎஸ் வரை இருக்கும். ஜியோ ஜிகா ஃபைபர் திட்டத்தின் விலை சுமார் 700 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை இருக்கும்.

இதனிடையே ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் செய்ய வேண்டிய முதலீடுகள் எல்லாம் முடிந்துவிட்டது என அம்பானி குறிப்பிட்டுள்ளார். மேலும் Mixed Reality (MR)ரக ஹெட் செட்களையும் கூடிய விரைவில் ரிலையன்ஸ் சந்தைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில், ஜியோ ஜிகா ஃபைபர் ப்ரீமியம் திட்டத்தின் மூலம், வாடிக்கையாளர்கள் திரைப்படங்கள் வெளியாகும் அன்றே அதை விலைகொடுத்துப் பார்க்கும் Jio FDFS திட்டம் குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு லேண்ட்லைன் சேவைகளும் குறைந்த விலையில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ISD அழைப்புகளுக்கு, தற்போதைய சந்தை விலையில் 1/10 மடங்குதான் ஜியோவில் செலுத்தவேண்டியதிருக்கும். அன்லிமிடெட் அமெரிக்கா மற்றும் கனடா அழைப்புகளுக்கு 500 ரூபாய் பேக் ஒன்றையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது, ஜியோ. மேலும் வெல்கம் பிளானாக (Welcome Plan) நீண்டகால சேவைகளைப் (Jio Forever Plan) பெறுவதாக இருந்தால், இலவச 4K LED டிவியும், 4K செட்-அப் பாக்ஸும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது..

JIO, JIO GIGAFIBER, FULLHD TV, JIO FOREVER PLAN, MUKESH AMBANI, RELIANCE JIO

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்