கொரோனா 'சீல்' வச்ச வீட்டில் திருடர்கள்...! 'டேய் கிச்சன்ல மட்டன் இருக்கு...' 'அப்போ அதான் பர்ஸ்ட், மத்ததெல்லாம் நெக்ஸ்ட்...' - திருடர்கள் எடுத்த ரிஸ்க்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஜார்க்கண்ட் மாநிலத்தில் கொரோனா நோயாளி தனிமைப்பட்டிருக்கும் வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள் சாப்பாடு, மட்டன் தொக்கு மற்றும் சப்பாத்தி சமைத்து சாப்பிட்டு ரூபாய் 50,000 பணத்தையும் அள்ளிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்டின் ஜாம்ஷெட்பூரின் ஹலுட்போனி பகுதியில் இருக்கும் ஒரு குடியிருப்பு பகுதியில் இருக்கும் ஒரு வீட்டிற்கு கடந்த வியாழக்கிழமை இரவு திருடன் ஒருவன் வீட்டினுள் நுழைந்துள்ளார். அந்த வீட்டின் உரிமையாளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு டாடா பிரதான மருத்துவமனையில் (டி.எம்.எச்) சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் தான் கூர்மையான ஆயுதங்களைப் பயன்படுத்தி சீல் செய்யப்பட்ட அவரது வீட்டின் பின்புற கதவைத் திறந்து திருடர்கள் உள்ளே நுழைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
கொரோனா பாதித்து மருத்துவமனையில் இருக்கும் நோயாளியின் சகோதரர் வெள்ளிக்கிழமை வீட்டைச் சரிபார்க்க அங்கு சென்றபோது வீட்டின் பின்புற கதவு உடைந்து கிடப்பதை பற்றி அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து காவல் நிலையம் சென்ற அவரின் சகோதரர், "திருடர்கள் மட்டன், அரிசி மற்றும் சப்பாத்திகளை சமைத்து சாப்பிட்டுவிட்டு, ரூபாய் 50,000 பணத்தையும் திருடியுள்ளனர்" என்று கூறி போலீஸில் புகார் அளித்துள்ளார். மேலும் தன் சகோதரர் மற்றும் அவரின் மனைவி, குழந்தைகள் தங்கள் சொந்த கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக தங்கியுள்ளதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் டி.எஸ்.பி அதிகாரி, 'இங்குள்ள டாடா மெயின் ஆஸ்பத்திரியில் (டி.எம்.எச்) சிகிச்சை பெற்று வரும் கோவிட் -19 நோயாளியின் வீட்டில் இருந்து ரூ .50,000 ரொக்கம் மற்றும் நகைகளை திருடர்கள் திருடிச் சென்றனர்' என்று எச்.டி மேற்கோள் காட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு (டி.எஸ்.பி) கூறினார். மேலும், அப்பகுதியில் காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், கொள்ளை சம்பவம் குறித்தான விசாரணை நடந்து வருவதாகவும் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ’20 கத்தி குத்துகள்... மரணம் பயம்...’ - மனைவியின் ’சமயோஜிதத்தால்’, திருடர்களிடமிருந்து ‘போராடி’ தப்பிய இளம் IT ஊழியர்! - நெஞ்சை உறைய வைக்கும் திக் திக் நிமிடங்கள்!
- 'அக்யூஸ்ட்டுக்கு' தண்டனை வாங்கிக் 'குடுக்கலாம்னு' பாத்தா... 'அக்யூஸ்டே தண்டனை குடுத்திடுறான்...' 'கொள்ளையன்' மூலமாக '6 போலீசாருக்கு' கொரோனா...
- 'சார் உங்களுக்கு ஒரு கொரியர் வந்திருக்கு...' 'உள்ள என்ன இருக்குன்னு பார்த்தா...' '15 நாளுக்கு முன்னால தொலைஞ்சு போன...' திருடர் செய்த வேற லெவல் காரியம்...!
- "வயதானவரை கவனித்துவந்த பெண்!".. அந்த வீட்டிலேயே நகை, பொருட்களை திருடிவிட்டு செய்த ‘பலே’ வேலை!
- "ஆவணம் அசல்.. பைக் போலி.. OLX-ல கண்டே பிடிக்க முடியாது!.. YOUTUBE-ஐ பார்த்து கத்துகிட்ட சுயதொழில்!' 'சென்னை-யில்' இப்படி ஒரு 'விசேஷ' திருடனா?
- 'திருடனுக்கு கொரோனா தொற்று...' தனிமைப்படுத்தப்பட்ட 'நீதிபதி, 17 போலீசார்'... 'தலைகீழாக' மாறிய 'நிலைமை...'
- 'அதிகாலை' நேரம் ... குடியிருப்பில் கேட்ட இளம்பெண்ணின் 'கதறல்' ... திருடனால் நேர்ந்த விபரீதம்! ... ஊரடங்கிலும் அடங்காத கொடூரம்
- 'வீட்டில்' ஒருவருக்கு 'கொரோனா' தொற்று... 'குடும்பமே மருத்துவமனையில்...' வீட்டில் 'யாரும் இல்லாத' நிலையில்... நிகழ்ந்த 'அதிர்ச்சி சம்பவம்...'
- 'திருடுறதுல சோம்பேறித்தனம்' ... எதுவும் எடுக்காம போயி கடைசியில் .... வசமாக சிக்கிக் கொண்ட திருடர்கள்
- கொஞ்சம் நேரம் முன்னாடிதான் ஒரு 'கோல்டு செயின்' அடிச்சோம்...! 'இதே வேலையாதான் சுத்திட்டு இருந்துருக்காங்க...' வசமாக வந்து சிக்கிய கொள்ளையர்கள்...!