'அரசு பள்ளியில படிச்சவங்களுக்கு தான்...' 'இனிமே அரசு வேலை...' - அதிரடியாக அறிவித்த மாநில அமைச்சர்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இனி அரசு பள்ளிகளில் படித்தால் மட்டுமே அரசு வேலை  கிடைக்கும் என சட்டம் பிறப்பிக்கவேண்டும் என ஜார்க்கண்ட மாநில பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை அமைச்சர் ஜகர்நாத் மதோ கூறியுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநில பள்ளிக் கல்வித்துறை, அதன் கல்வி அமைப்பைச் சீரமைக்கும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. அதன் ஒரு பாகமாக தற்போது அரசுப் பள்ளிகளில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசாங்க வேலை என்ற சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என ஜார்க்கண்ட மாநில பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை அமைச்சர் ஜகர்நாத் மதோ நேற்று கூறியுள்ளார்.

மேலும், தனியார் பள்ளிகளில் படித்துவிட்டு அரசு வேலைக்கு முயற்சிப்பது நியாயம் இல்லை. மேலும் அரசுப் பள்ளிகளில் படிப்பவர்களுக்கு மட்டுமே அரசாங்க வேலை கொடுக்கப்பட்ட வேண்டும் என்பதே என்னுடைய நிலைப்பாடு.

அரசாங்க வேலைக்கு வரவேண்டும் என நினைப்பவர்கள் கட்டாயம் அரசுப் பள்ளியில்தான் படிக்க வேண்டும். மேலும் நமது கல்வி அமைப்பை தனியார் பள்ளிகளில் படித்துவிட்டு அரசுப் பணிக்கு மக்கள் முயல்வதில் நியாயம் இல்லை. அரசாங்க வேலை வேண்டுமென நினைத்தால் அவர்கள் அரசாங்க பள்ளியில் தான் படிக்கவேண்டும்.

அதுமட்டுமில்லாமல் ஜார்க்கண்ட் மாநிலத்தின் கல்வி அமைப்பை மேம்படுத்த இதுபோன்ற கறாரான நடவடிக்கைகள் இருப்பினும் பொதுமக்களின் கருத்துக் கேட்கப்பட்டு ஒப்புதல் பெற்ற பிறகே இந்தத் திட்டத்தைச் சட்டமாக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதோடு ஆசியர்களுக்கு கூடுதல் பணிகள் ஒப்படைப்பதை தவிர்க்கவேண்டும். அப்போதுதான் கற்பித்தல் பணியில் ஆசிரியர்களால் திறம்பட ஈடுபட்டு மாணவர்களுக்குத் தரமான கல்வியைப் போதிக்க முடியும்.

நம்முடைய மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஒவ்வொரு மாணவருக்கும் தலா ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரம் வரை மாதந்தோறும் அரசாங்கம் செலவழித்து வருகிறது. இருப்பினும் அனைவரும் தனியார் பள்ளிகளை நோக்கியே செல்கின்றனர். மேலும், பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கும் விதமாக அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார் ஜார்க்கண்ட மாநில பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறை அமைச்சர் ஜகர்நாத் மதோ.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்