சிகிச்சை பலனின்றி... 'இறந்து' போன 21 வயது மகனின் 'இறுதிச்சடங்கை'... லைவ் 'வீடியோவில்' பார்த்து கதறிய குடும்பம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாசிகிச்சை பலனின்றி இறந்து போன தங்களது மகனின் இறுதிச்சடங்கை வீடியோ காலில் ஒட்டுமொத்த குடும்பமும் பார்த்த துயர சம்பவம் ஜார்க்கண்டில் நிகழ்ந்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் சிம்டேகா மாவட்டத்தை சேர்ந்தவர் அர்ஜுன் பராய்க்(21) இவர் கோவாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கி வேலை பார்த்து வந்தார். சமீபகாலமாக மஞ்சள் காமாலையினால் அவதிப்பட்டு வந்த இவர் அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் இறந்தார்.
தற்போது ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருப்பதால் அவரது உடலை கோவாவில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு கொண்டு செல்ல முடியவில்லை. இதையடுத்து அவரது இறுதிச்சடங்கு கோவாவிலேயே நடைபெற்றது. அர்ஜுனின் நண்பர் இதனை லைவ் வீடியோவில் அவரது குடும்பத்தினருக்கு காண்பித்தார்.
இதைப்பார்த்து அவரது குடும்பத்தினர் கலங்கி அழுதனர். தொடர்ந்து அவர்களின் பாரம்பரிய முறைப்படி அர்ஜுனின் ஆடைகளை அவர்களது தோட்டத்தில் புதைத்தனர். இதுகுறித்து அவரது தந்தை, ''ஊரடங்கு உத்தரவால் எங்களது மகனின் உடலை சொந்த கிராமத்திற்கு கொண்டுவர முடியவில்லை. என்னுடைய சோகத்தை என்னால் வெளிப்படுத்த முடியவில்லை,'' என தெரிவித்து இருக்கிறார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- மருத்துவர்கள் மீது 'கல்வீச்சு' நடத்திய மக்கள்... எல்லாத்துக்கும் காரணம் 'அந்த' வீடியோ தான்... 'அதிர்ச்சி' பின்னணி!
- ஸ்மார்ட் போன்களில் 'கொரோனா' வைரஸ்... எத்தனை நாட்கள் 'உயிர்' வாழும்?... 'புதிய' தகவல்!
- ‘என் ஏரியால 15 பேருக்கு கொரோனா இருக்கு!’.. ‘வாட்ஸ்-ஆப்பில் வந்த தகவல்.. பெண் செய்த பரபரப்பு காரியம்!’
- ‘வாட்ஸ்அப் செயலியில் புது நடவடிக்கை’... ‘இனி ஸ்டேட்டஸ் வீடியோ 15 வினாடிகள் தான்’... வெளியான காரணம்!
- 'மது' அருந்துவது 'கொரோனா' தொற்றை தடுக்குமா?... உலக 'சுகாதார' அமைப்பு விளக்கம்!
- கொரோனாவால் 'டேட்டிங்' ஆப்களில்... அலைமோதும் இளைஞர்கள்... 'அந்த' ஆப்-க்கு தான் மவுசு அதிகமாம்!
- 'போட்ட பிளான் எல்லாத்தையும் சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களே டீச்சர்'... வாட்ஸ்-அப்பில் ட்விஸ்ட் வைத்த ஆசிரியர்கள்!
- ‘திருடிய செல்போனில் செல்ஃபி’.. ‘காட்டிக்கொடுத்த இமெயில்’.. சென்னையை அதிரவைத்த சம்பவம்..!
- வீட்டை எதிர்த்து 'காதல் திருமணம்' செய்த இளம்பெண் தற்கொலை... மொபைலில் இருந்த 'வீடியோவைப்' பார்த்து... 'அதிர்ந்து' போன போலீசார்!
- 'ரிசல்ட் வந்த உடனே குரூப்ல மெசேஜ் வரும்'... 'ஒரே ஒரு 'சீட்டு' தான்... ஆனா, அது அவ்ளோ ஈஸி இல்ல'... ஸ்டேட் விட்டு ஸ்டேட்... 'வாட்ஸ் அப்'பில் லாட்டரி சீட்டு வியாபாரம்!