இது புதுசால்ல இருக்கு.. விநாயகருக்கு ஆதார் கார்டு வடிவில் சிலை.. பிறந்த தேதிலாம் இருக்கா..?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஒருவர், விநாயகருக்கு ஆதார் கார்டு வடிவில் பந்தல் அமைத்திருப்பது உள்ளூர் மக்களை திகைப்பில் ஆழ்த்தியிருக்கிறது. மேலும், இந்த சிலையின் புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertising
>
Advertising

விநாயகர் சதுர்த்தி

இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்திக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நாடு முழுவதும் முக்கிய இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து மக்கள் வழிபட்டு வருகின்றனர். 10 நாட்கள் நீடிக்கும் இந்த பெருவிழாவில், பெரும்பாலான வீடுகளில் சிறிய வடிவிலான மண் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபடுவது வழக்கமாகும். அதன் பிறகு அருகில் உள்ள நீர்நிலைகளில் அதனை கரைப்பது வழக்கம்.

அதேபோல, வெளிமாநிலங்களில் பந்தல் எனப்படும் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவி வழிபாடு நடத்துவார்கள். இதில் ஒவ்வொரு ஆண்டும் வித்தியாசமான முறையில் விநாயகர் சிலைகள் உருவாக்கப்படும். அந்த வகையில் அந்த ஆண்டு ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் ஆதார் கார்டு வடிவில் விநாயகருக்கு சிலை செய்திருக்கிறார். இது பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

ஈர்ப்பு

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கலைஞர் சரவ் குமார். இவர் ஒருமுறை விநாயகர் சதுர்த்தி பண்டிகையின்போது கொல்கத்தா சென்றிருக்கிறார். அப்போது பேஸ்புக் வடிவில் விநாயகர் பந்தல் அமைக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஈர்க்கப்பட்ட சரவ் குமார் தானும் அதுபோன்ற வித்தியாயமான விநாயகர் சிலையை உருவாக்க வேண்டும் என நினைத்திருக்கிறார். அப்போதுதான் இந்த ஆதார் கார்டு ஐடியா அவருக்கு வந்திருக்கிறது.

உயரமான ஆதார் கார்டு வடிவிலான அமைப்பில், புகைப்படம் இருக்கும் பகுதியில் விநாயகர் சிலை வைக்கப்பட்டிருக்கிறது. அதில் பெயர் விநாயகர் என்றும் தாய் தந்தையர் பெயர் மஹாதேவ் மற்றும் கைலாச பார்வதி என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. முகவரியாக 'மேல்தளம், மானசரோவர் ஏரிக்கு அருகே' எனக் குறிப்பிட்டுள்ளார் சரவ் . அதேபோல விநாயகரின் பிறந்த தேதியாக 01/01/ 600 CE எனக் குறிப்பிட்டுள்ளார் அவர்.

இந்நிலையில், இது உள்ளூர் மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்த பந்தலை ஆர்வத்துடன் பார்த்து செல்லும் மக்கள், புகைப்படங்கள் எடுக்கவும் தவறுவதில்லை. இந்நிலையில், இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

VINAYAGAR, CHATURTHI, ADHAAR, PANDAL, விநாயகர் சதுர்த்தி, ஆதார் கார்டு, பந்தல்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்