'Happy Married Life தாத்தா'... 'அப்பாவுக்கும், மகனுக்கும் ஒரே மேடையில் திருமணம்'... ஆச்சரிய காரணம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாதந்தைக்கும், மகனுக்கும் ஒரே மேடையில் திருமணம் நடந்துள்ள சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் குல்மா மாவட்டத்தில் கக்ரா என்ற பகுதியில் பழங்குடி இன மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். இங்குள்ள பலரும் திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக இணைந்து தம்பதியராக வாழ்ந்து வருகிறார்கள். இந்த கிராமத்தைச் சேர்ந்த ராம்லால் மற்றும் ஷாக்கோரி என்ற தம்பதியினர், 30 வருடங்களுக்கும் மேலாகத் திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஜித்தீஷ் என்ற மகனும் உள்ளார்.
மகன் ஜித்தீசும் திருமணம் செய்துகொள்ளாமல் அருணா என்ற பெண்ணுடன் வாழ்ந்து வருகிறார். இவர்களுக்குக் குழந்தை ஒன்றும் உள்ளது. இந்நிலையில் கக்ரா கிராமத்தில் பலர் திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வருவதை அறிந்த தொண்டு நிறுவனம் ஒன்று, தங்கள் செலவில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தது. இதையடுத்து தந்தை ராம்லால்க்கும், மகன் ஜித்தீசுக்கும் ஒரே மேடையில் திருமணம் நடைபெற்றது.
30 வருடங்கள் கழித்து, பேரன் மற்றும் மகன் முன்னிலையில் தந்தை திருமணம் செய்துள்ள நிகழ்வு பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘திருமணத்திற்கு’ மறுத்த ‘தாய்க்கு’... பெண் கேட்டு வந்த ‘ராணுவ’ வீரரால் நடந்த பயங்கரம்.. ‘பரபரப்பை’ ஏற்படுத்திய சம்பவம்...
- என் பொண்ணுக்கு ‘கொரோனா’ இல்ல... அவ ‘ஆபத்துல’ இருக்கா... ‘மீட்க’ கோரி ‘தந்தை’ எழுதிய ‘உருக்கமான’ கடிதம்...
- 'அழைக்கா விருந்தாளியா கொரோனா வந்துடுமோனு ஒரு பயம் தான்!'... '220 ஜோடிகள்... ஒரே இடம்!'... 'கொரோனா' பரிதாபங்கள்!
- தந்தையின் ‘மரணம்’ குறித்து ‘மாலைவரை’ அறியாத ‘மகள்’... ‘தேர்வு’ முடிந்து திரும்பியவருக்கு காத்திருந்த ‘பேரதிர்ச்சி’...
- 'கடமைக்காக கல்யாணத்தை தள்ளிப்போட்டாரு!'... 'அவருக்கு இப்படி நடந்தத ஏத்துக்கவே முடியல!'... உணர்ச்சி பொங்க 'மக்கள்' கண்ணீர்!
- கல்யாணம் ஆன 12 மணிநேரத்தில் பிரிந்த ‘காதல் ஜோடி’!.. ‘அந்தர்பல்டி அடித்த காதலி’.. ஷாக் ஆன காதலன்..!
- ‘இதுதான்’ என் வாழ்க்கையோட ‘லட்சியமே’... ‘சென்னை’ பெண்ணிடம் வேலையைக் காட்டிய ‘பட்டதாரி’ இளைஞர்... விசாரணையில் வெளிவந்த ‘திடுக்கிடும்’ தகவல்கள்...
- ‘நாங்க முஸ்லிமா இருந்தாலும்...’ ‘எங்க பொண்ணுக்கு இந்து முறைப்படி தான் கல்யாணம் நடக்கணும்...’ அசத்திய கேரளப் பெற்றோர்...!
- ‘காதலர்’ தினத்தன்று நடக்கவிருந்த ‘திருமணம்’... ‘வாட்ஸ்அப்பில்’ வந்த ஒரு மெசேஜால்... முடிவுக்கு வந்த ‘10 ஆண்டு’ காதல்...
- 'தவமிருந்து'... '20 வருஷம் கழித்து பிறந்த குழந்தை'... '13 வாரத்தில் நிகழ்ந்த கொடூரம்'... 'நெஞ்சை உலுக்கும் சோகம்'!